Sunday, 3 July 2011

தாய்லாந்தின் முதல் பெண் அதிபராகிறார் யிங்க்லக் சினவத்ரா! :பொதுத் தேர்தலில் அமோக வெற்றி .


     தாய்லாந்தின் முதல் பெண் அதிபராகிறார் யிங்க்லக் சினவத்ரா! :பொதுத் தேர்தலில் அமோக வெற்றி

 

தாய்லாந்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில், யிங்க்லக் சினவத்ரா தலைமையிலான எதிர்க்கட்சி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதுடன், தாய்லாந்தின் முதல் பெண் அதிபராக யிங்க்லக் சினவத்ரா தெரிவாகவுள்ளார்.
இத்தேர்தலில் யிங்லக்கின் தாய் கட்சி 313 ஆசனங்களையும், ஆளும் ஜனநாயக கட்சி 152 ஆசனங்களையும் பெற்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ராவின் இளைய சகோதரியான யிங்க்லக் சினவத்ரா தான் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும், இன்றைய இரவு எனக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

2006 இல் நடந்த இராணுவ புரட்சியின் போது அப்போதைய அதிபராக இருந்த தக்ஷின் சினவத்ரா நாட்டைவிட்டு வெளியேறி டுபாயில் தஞ்சமடைந்திருந்தார். இவர் மேன்செஸ்டர் கிளப்பின் தலைவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது சகோதரி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால் விரைவில் அவர் தாய்லாந்துக்கு திரும்பவுள்ளார்.

No comments: