அணு உலையை குளிர்விக்கும் பகுதியில் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் பிரிட்டன் அணு மின்நிலையத்தில் இரண்டு அணு உலைகள் அவசரமாக மூடப்பட்டன.மீன்கள் அணு உலைப் பகுதியில் வந்ததால் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அணு உலை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். கிழக்கு லோதியன் டன்பர் பகுதியில் இடிஎப் எனர்ஜி இந்த அணு மின் நிலையத்தை இயக்கி வருகிறது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணு மின் உலை தற்காலிமாக மூடப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜெல்லி மீன்கள் புகுந்ததால் கதிர் வீச்சு அபாயம் இல்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
ஜெல்லி மீன்கள் தண்ணீர் செல்லும் பாதையை அடைத்ததால் பிரச்சினை வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது. கடந்த மார்ச் மதம் 11ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு எற்பட்டது.
அந்த இயற்கை பேரிடருக்கு பின்னர் அணு கதிர் வீச்சு விடயத்தில் உலக நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment