Friday, 4 November 2011

விசித்திரமான யானை முகம் கொண்ட இளைஞர்

இந்த உலகில் எத்தனையோ விதமான விசித்திர மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த இளைஞனின் விசித்திர குறைபாடுகள் மற்றவர்களை சோகத்தில் ஆழ்த்தக்கூடியவை.
இப்படிப்பட்ட இந்த இளைஞனை இந்தியாவின் யானை மனிதன் அல்லது யானை முக இளைஞன் என அழைக்கின்றனர்.
கிழக்கு இந்தியாவின் லோரிகா எனும் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
26 வயது நிரம்பிய இவரின் பெயர் லலித் ராம். இவருடைய முகத்தில் காணப்படும் விசித்திர தோற்றமே இவரை யானை முக இளைஞன் என்று மற்றவர்கள் அழைப்பதற்கு காரணம்.
மேலும் இவருக்கு முகத்தில் மேலதிக தசைகள் வளர்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இவரை நாள்தோறும் பலர் கேலி மற்றும் கிண்டல் செய்கின்றனர்.
மேலும் பலர் உனது முகம் மிகவும் அசிங்கமாக இருப்பதால் உனக்கு திருமணம் நடக்காது என்றும் உன்னை யாரும் காதலிக்க மாட்டார்கள் என்றும் கூறுகிறார்களாம்.
இந்த மனிதர்களுக்கு மத்தியில் இந்த இளைஞன் மன உறுதியுடன் எனக்கு திருமணம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.
இவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த விசித்திர குறைபாடு மரபணு மாற்றங்களால் ஏற்பட்டது எனவும் இதனை அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியும் எனவும் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவரான விவேக் குமார் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த இளைஞன் தற்போது அறுவை சிகிச்சை செய்ய ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: