முஅத்தஸிம் கொல்லப்பட்டதைக் கேட்டு கண்ணீர் சிந்தியதாக வனெஸ்ஸா தெரிவித்திருந்தார்.
கடாஃபியின் மகனைக் காதலித்தேன் என்று பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்த இத்தாலிய அமெரிக்க சூப்பர் மாடல் அழகியுடன் தாங்கள் செய்துகொண்டிருந்த விளம்பர ஒப்பந்தத்தை ஸ்பானிஷ் ஐரோப்பிய தொலைதொடர்பு நிறுவனம் ஒன்று ரத்து செய்துள்ளது.
கர்ணல் கடாஃபியின் மகன் முத்தஸிம்மின் காதலியாக நான்கு ஆண்டுகள் தான் இருந்துள்ளேன் என்று வனெஸ்ஸா ஹெஸ்லர் தெரிவித்திருந்தார்.
வனெஸ்ஸா ஹெஸ்லரின் அழகு முகமும் வாளிப்பான உடலும் நீளமான கால்களும் ஐரோப்பா எங்கிலும் விளம்பரப் பலகைகளையும் இணையப் பக்கங்களையும் அலங்கரித்து வந்துள்ளன.
ஸ்பானிஷ் ஐரோப்பிய தொலைதொடர்பு நிறுவனங்களின் குழுமமான டெலெஃபோனிக்காவின் அகண்ட அலைக்கற்றை இணையத் தொடர்பு சேவைக்கான விளம்பரங்களில் தோன்றி வந்த சூப்பர் மாடல் இவர்.
ஆனால் இவர் அளித்த ஒரு பேட்டியின் காரணமாக டெலிஃபோனிக்கா நிறுவனத்தில் மாடலிங் பணியை தற்போது இவர் இழந்துள்ளார்.
இணையப் பக்கங்களில் வரும் டெலிஃபோனிக்காவின் விளம்பரங்களில் இருந்தும் இவரது படங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டன.
சில நாட்கள் முன்பு கர்ணல் கடாஃபியுடன் சேர்த்துக் கொல்லப்பட்டிருந்த அவரது மகன் முத்தஸிம் கடாஃபியுடன் நான்கு ஆண்டுகள் காலம் தான் உறவு வைத்திருந்ததாக பிரபலங்கள் தொடர்பான இத்தாலிய பொழுதுபோக்கு சஞ்சிகை டீவா இ டோன்னாவுக்கு அளித்த பேட்டியில் இவர் சொல்லியிருந்தார்.
நெருக்கம்
முத்தஸிம் கொல்லப்பட்டதை அறிந்து தான் கண்ணீர் சிந்தியதாகவும், காதலித்த நாட்களில் அவருடன் உணர்வுமிக்க நெருக்கமானதொரு உறவு வைத்திருந்தாக வனெஸ்ஸா சொல்லியிருந்தார்.
ஆனாலும் லிபியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து அவருடன் தான் தொடர்பில் இல்லை என்று இவர் தெரிவித்துள்ளார்.
கடாஃபி குடும்பத்தாரின் மற்ற உறுப்பினர்களையெல்லாம் தான் சந்தித்திருக்கிறேன் என்றும், அவர்கள் எல்லாம் 'இயல்பான ஆட்கள்'தான் என்றும் இவர் குறிப்பிட்டிருந்தார்.

No comments:
Post a Comment