ஏடிஎம்-ல் என்ன வரும்? பணம் வரும். இல்லாவிட்டால் பணம் இல்லை என்று வரும் மெசேஜை பார்த்து எரிச்சல் வரும்.
ஸ்பெயினில் உள்ள ஏடிஎம் மெஷினில் இருந்து பாம்பு வந்திருக்கிறது. ஸ்பெயினின் பாஸ்க் பகுதியில் உள்ளது லாடியோ நகரம். இங்குள்ள கஜா மாட்ரிட் வங்கி ஏடிஎம்-க்கு நேற்று ஒருவர் பணம் எடுக்க வந்தார்.
கார்டை நுழைத்து கடவுச்சொல்லை அடித்து பண தொகையை டைப் செய்தார். பணம் வரும் வழியில் தயாராக கையை வைத்திருந்தார்.
நாணய நோட்டுகளுடன் கூடவே வழுவழுவென்று ஏதோ தென்பட்டது. சுதாரித்த அவர் நோட்டுகளை சட்டென்று இழுத்துவிட்டார்.
பாம்பு ஒன்று புஸ்.. புஸ் என்று சத்தம் போட்டபடியே மெதுவாக வெளியே தலையை நீட்டியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த பொலிஸ்காரர் ஒருவர் தனது லத்தியை லாவகமாக அதன் அருகே பிடித்தார். அதை பிடித்துக்கொண்டு ஏற தொடங்கியது பாம்பு.
இதற்குள் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உள் பக்கத்தில் குச்சியை விட்டு குத்தி அதை வெளியே தள்ளினர்.
ஒரு பெட்டியில் அடைத்து பாம்பு பண்ணைக்கு அதை பத்திரமாக அனுப்பி வைத்தனர். ஏடிஎம் மெஷினில் பணத்தை எண்ணி வெளியே தள்ளும் பகுதியில் பாம்பு சிக்கியிருந்ததும் நாணயங்களுடன் சேர்ந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
வயல்வெளியில் இருந்து பாம்பு தானாகவே புகுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஷமத்தனமாக யாராவது பாம்பை உள்ளே போட்டார்களா என்றும் விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment