என்ஜினீயர் சிவக்குமாரின் மனைவி சொர்ணலதா கூறிபதாவது:-
2004-ம் ஆண்டு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு எங்களது திருமணம் நடந்தது. வரதட்சனைபாக 100பவுன் நகையும், சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு வரை நாங்கள் கோவையில் குடும்பம் நடத்தி வந்தோம். 2 பேரும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுபணிபுரிய நினைத்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம். அப்போது எனக்கும் எனது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டது. என்னை அவர் அடித்ததால் பிரச்சினை அதிகமானது.
இந்த நேரத்தில் எனது கணவர் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். செல்வதற்கு முன்பே எனக்கு தெரியாமல் குடும்பநல கோர்ட்டில் விவாகரத்துக்கு மனு செய்துள்ளார். கொஞ்ச காலத்துக்கு பின்பு நானும் வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்று விட்டேன். அங்கு எனக்கு விவாகரத்து நோட்டீசு வந்தது. நான் அதில் கையெழுத்திட மறுத்து திருப்பி அனுப்பினேன்.
கணவரின் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரது பேஷ்புக்கை திறந்துபார்த்தேன். அதில் வேறு ஒரு பெண்படம் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் அந்த பெண் யார்? என்பதை எனது கணவரின் நண்பர்கள் மூலமாக விசாரித்தேன். அப்போது அந்த பெண் பீளமேட்டை சேர்ந்த பூர்னேஸ்வரி என்பதும், தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிவதும் தெரியவந்தது. அவரது பேஷ்புக்கின் பாஸ்வேர்டுவை அறிந்து அதற்குள் சென்றுபார்த்தேன். அதில் எனது கணவர் போட்டோ இருந்தது.
மேலும் அந்த பெண் சிவக்குமாருக்கும் தனக்கும் செப்டம்பர் மாதம் 12-ந் தேதி திருமண நிச்சபதார்த்தம் நடந்ததாகவும், டிசம்பர் மாதம் 5-ந்தேதி திருமணம் நடக்க இருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அந்த பெண்ணுக்கு பேஷ்புக் மூலம் தகவல் அனுப்பினேன். எனக்கும் சிவக்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இன்னமும் விவாகரத்து பெறவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறோம் என்று 15 முறை பூர்னேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் ரகசியமாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்கள்.
என்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த சிவக்குமாரையும், பூர்னேஸ்வரியையும் சும்மா விடமாட்டேன். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:
Post a Comment