Sunday, 11 December 2011

நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்

 


தனுஷ் நடிக்கும் 3என்ற படத்தில் ஒய் திஸ் கொலை வெறிடிபாடல் இடம் பெறுகிறது. இந்த படாலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இது உலகமெங்கும் வரவேற்பை பெற்றுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்கள் இண்டர்நெட்டில் பாடலை கேட்டு பாராட்டி உள்ளனர். அமிதாப்பச்சனும் பாராட்டி உள்ளார்.

இந்த பாட்டுக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. பெண்களுக்கு எதிரானது என்றும், கல்லூரி மாணவர்கள் ஈவ்டீசிங்குக்கு இந்த படாலை பயன்படுத்துவார்கள் என்றும் மகளிர் அமைப்புகள் கண்டித்துள்ளன. இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தரும் எதிர்த்துள்ளார். தற்போது பிரபல கன்னட நடிகர் ஸ்ரீநாத்தும் கொலை வெறிடி பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீநாத் கூறியதாவது:-

பாடல்களை இசைதான் தீர்மானிக்கும். இசைக்கும் பாட்டுக்கும் சம்பந்தம் உண்டு. ஆனால் ஒய்திஸ் கொலை வெறிடி பாடலில் இசைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத பாடலாக அது உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை விரும்புவதாக சொல்கின்றனர்.

ஆனால் அதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன். கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: