Monday, 14 November 2011

தி டர்ட்டி பிக்சரில் 'நாக்க முக்க ' பாடல்!


நகுல், சுனைனா நடிப்பில் வெளிவந்த படம் 'காதலில் விழுந்தேன்'. விஜய் ஆண்டனி இசையில் இப்படத்தில் இடம்பெற்ற 'நாக்க முக்க' என்ற பாடல் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெற்றது.

இளைஞர்கள், சிறு குழந்தைகள் மத்தியில் பாடலும் அப்பாடலின் நடனமும் வரவேற்பை பெற்றது. 2011 உலக கோப்பை துவக்க நாளிலும் இப்பாடலுக்கு நடனம ஆடினார்கள். அது போலவே சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் துவக்க விழாவில் ஷாருக்கான் இப்பாடலுக்கு நடனமாடினார். பல்வேறு விருதுகளும் இப்பாடலுக்கு கிடைத்து இருக்கிறது.

இந்தி திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே வெளிவர இருக்கும் படம் 'தி டர்ட்டி பிக்சர்'. வித்யா பாலன் சில்க் ஸ்மிதா இப்படத்தில் 'நாக்க முக்க' பாடல் இடம் பெற இருக்கிறது.

இது குறித்து படக்குழு கூறியிருப்பது " நாக்க முக்க பாடல் 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் பல்வேறு இடங்களில் இடம் பெற இருக்கிறது. பாடலில் எந்த மாற்றமும் செய்யவில்லை." என்று தெரிவித்துள்ளனர்.

படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலுக்கு நஷ்ருதீன் ஷா நடனமாடினார்.

'நாக்க முக்க' பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார் விஜய் ஆண்டனி.

No comments: