
நீலாங்கரையில் பப் ஒன்றில் இளம் பெண்ணை சிலர் கிண்டல் செய்ததாகவும், இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்று கூறுவது உண்மையல்ல. திட்டமிட்டு சிலர், சிம்பு மீது வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள நீலாங்கரை கடற்கரை பகுதியில் ஏராளமான பப்கள் உள்ளன. கடந்த இருதினங்களுக்கு முன்னர் இங்குள்ள பப் ஒன்றில் இளம் பெண்ணை கிண்டல் செய்ததாகவும், அவரை வலுக்கட்டாயமாக ஆட சிலர் வற்புறுத்தியதாகவும், இதில் அந்த பெண்ணின் கணவர் தாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்று செய்திகள் வெளியானது. இதனை நடிகர் சிம்புவின் தந்தையும், டைரக்டருமான டி.ராஜேந்தர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. சிம்பு நடிகர் என்பதால் செல்லும் இடங்களில் நிறைய பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு செல்லும்போது பலர் இதுபோல் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களையெல்லாம் நண்பர்கள் என்று சொல்ல முடியுமா? சிலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்றும் செய்தி வந்துள்ளது. சிம்பு என்னிடம் அப்படி நண்பர்கள் யாரும் கிடையாது என்றார். திட்டமிட்டு சிலர் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதன் மேல் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment