இலங்கையின் வடக்கு, கிழக்கில் உண்மை நிலையைக் கண்டறியும் வகையில் சுஸ்மா சுவராஜ் இலங்கைக்கு பயணம் செய்யவிருந்தார்.
இலங்கையின் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் தனிப்பட்ட காரணங்களால் தமது பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அவர் தமிழக தினமணி செய்தித்தாளுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 17-ம் திகதியன்று இரண்டுநாள் பயணமாக அவர் இலங்கைக்கு செல்லவிருந்தார். இதனை கடந்த வாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா உறுதிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் இலங்கைக்கு இந்திய நாடாளுமன்றக்குழு ஒன்று செல்லவுள்ளதாகவும் கிருஸ்ணா தெரிவித்திருந்தார்.
எனினும் தமது இலங்கை பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுஸ்மா சுவராஜ், இலங்கைக்கு செல்லும் இந்திய நாடாளுமன்றக்குழுவில் இடம்பெறுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment