இக் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எனக் கருதப்பட்ட முக்கிய நபர்களான ஒற்றைக் கண் சிவராசன் மற்றும் சுபா உள்ளிட்டவர்கள் பெங்களுரிற்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியில் வைத்து ஆகஸ்ட் 19, 1991ல் கொல்லப்பட்டனர்.
அதன்பிறகு இடம்பெற்ற இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் உளவுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் தேடப்படுவோராக 1999ல் அறிவிக்கப்பட்டனர்.
2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தாங்களாகவே “ராஜீவ் காந்தியின் கொலை ஒரு துர்ப்பாக்கியம், அந்தத் தவறுக்கு வருந்துகிறோம்” என பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தனர்.
எனினும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் உளவுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மான் வன்னி இறுதிப் போரில் இறந்து விட்டதாகக் கூறி அவர்களது பெயர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் தேதி வழக்கிலிருந்து இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டது.
அதுபோலவே வழக்குச் சோடிக்கப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதும் அதன் மீது தமிழர்களில் தொடரப்பட்ட மீள் வழக்கில் 22 பேருடைய மரண தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டு நால்வரே மரண தண்டனைக் கைதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அதிலொருவரான சிறீகரன் நளினி அல்லது முருகன் நளினியுடனான சோனியா காந்தி மற்றும் அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோரது சந்திப்பையடுத்து அதுகூட ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இவ்வாறு முதன்மைக் குற்றவாளிகள் இல்லாமலேயே இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதும், ஏனைய குற்றஞ் சாட்டப்பட்டவர்களிற்கு தண்டனை குறைக்கப்பட்ட போதும் இந்த மூவருக்கும் நீதியானதொரு விசாரணைக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதே பிரதான காரணமாகும்.
அத்தோடு இந்த வழக்கிற்கு தடாச் சட்டத்திற்குள் விசாரிக்கப்பட்டிருக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தக் கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜெயின் மற்றும் வர்மாக் கமிசன் அறிக்கைகள் நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக இருந்தவை மற்றும் இவர்கள் விடுவிக்கப்படுவதற்கு சோனியா குடும்பத்தினர் தாங்கள் தடையாக இல்லை என்று கருத்துத் தெரிவித்தமையாகும்.
மேலும் இவர்களது மனுவில் நியாயத்தன்மை இருந்தபடியால் தான் அது 11 வருடங்களாக பல ஜனாதிபதிகளால் விசாரிக்கப்பட்டிருக்கிறது அவர்கள் இந்த மனுவை நிராகரிப்பதற்குத் தயங்கியிருக்கிறார்கள் என்பனவும் வாதப் பொருட்களாகலாம் எனக் கருதப்படுகிறது.
இவ்வளவு பலவீனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு வழக்கு மீள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலேயே அதன் உண்மைத் தன்மை வெளிவரும்.

No comments:
Post a Comment