மகளுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை அமைத்துக் tகொடுக்கின்றமைக்காக 80 வயது முதியவர் ஒருவரைக்கூட மறுமணம் செய்கின்றமைக்கு தயாராக உள்ளார் என்று அறிவித்து உள்ளார் இலங்கையரான நடுத்தர வயதுப் பெண் ஒருவர். இவரின் பெயர் ரில்வி ரொமெய்ன் ( வயது - 39 ). பறங்கியர். கிறிஸ்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம், டச்சு போன்ற மொழிகளைப் பேசக் கூடியவர். ![]() கம்பஹா மாவட்டத்தில் வெயாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரது கணவன் கடந்த பெப்ரவரி மாதம் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்து விட்டார். இவருக்கு 14 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். சர்வதேச பாடசாலை ஒன்றில் பயில்கின்றார். ரொமெய்னின் குடும்பத்தினர் ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்தவர்கள். விதி வசத்தால் வறுமை நிலையை அடைந்து இருக்கின்றார்கள். இருப்பினும் மகளுக்கு நல்ல கல்வியை போதிக்க வேண்டும் என்பதில் ரொமெய்ன் பற்றுறுதியாக இருந்து வருகின்றார். கணவன் உயிரோடு இருக்கின்றவரை மகளின் கல்வி நடவடிக்கைகளில் சோர்வு ஏற்பட்டு இருக்கவில்லை என்றும் தற்போது வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கின்ற நிலையில் மகளின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியன கேள்விக்குறியாகி விட்டன என்றும் கவலையுடன் கூறுகின்றார் ரொமெய்ன். இந்நிலையில் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமானம் உடைய ஒருவரை மறுமணம் செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து இருக்கின்றார். 80 வயது கிழவரோ, நோயாளியோ, ஊனமுற்றவரோ என்றால்கூட பரவாயில்லை மகளை சொந்தப் பிள்ளையைப் போல் பார்க்க கூடிய ஒருவரை திருமணம் செய்ய தயார் என்று ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். வெளிநாட்டவர்கள் அல்லது புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களின் விண்ணப்பங்களைப் பெரிதும் பரிசீலனைக்கு கொள்வார் என்று கூறி உள்ளார். |
Thursday, 4 August 2011
80 வயது முதியவரை மணம் செய்ய தயாராக இருக்கும் 39 வயதுப் பெண்!
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment