| மக்கள் திலகம் என்கிற சொல்லைக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். நவ யுக கர்ணன் எம்.ஜி.ஆருக்கு மக்கள் விரும்பி வழங்கி இருந்த பட்டம் இது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்த இமயம் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்று பட்டம் சூட்டி மக்கள் மகிழ்ந்தார்கள். தமிழ் திரை உலகில் நவரச திலகம், இளைய திலகம் .... என்று எல்லாம் எத்தனையோ திலகங்களை கேள்விப் பட்டு இருக்கின்றோம். ஆனால் யார் இந்த முதல்வர் திலகம்? இந்தப் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது? நல்லூரில் சங்கிலி மன்னனுக்கு சொந்தச் செலவில் புதுச் சிலை அமைத்துக் கொடுத்து உள்ளார் கைலாசநாதர் பிள்ளையார் ஆலய குரு கே. குருசாமி சர்மா. இதற்கான உதவி, ஒத்தாசைகளை யாழ். மாநகர முதல்வர் என்கிற வகையில் யோகேஸ்வரி பற்குணநாதன் செய்து கொடுத்தார். ஆனால் கல்வெட்டில் முதல்வர் திலகம் என்று அவருக்கு அவரே பட்டம் சூட்டி மகிழ்ந்து உள்ளார். முதல்வர் திலகம் .... யோகேஸ்வரி அம்மையாருக்கு பராக்.... பராக். ![]() ![]() ![]() ![]() |
Thursday, 4 August 2011
யார் இந்த முதல்வர் திலகம் ? (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment