கட்சிக்கும் ரசிகர் மன்றத்துக்கும் இருக்கிற வித்தியாசம் கொடி, கொள்கைகள் மட்டுமல்ல, தலைவர் சொல் கேட்டு அடங்கி நடக்கிற விஷயத்திலும்தான். ஆனால்,விஜய் கலந்து கொண்ட படப்பிடிப்பில் அவருடைய சொல்லை கேட்காமல் உள்ளே புகுந்த ரசிகர்கள் நிஜமாகவே ரசிகர்கள்தானா? அல்லது வேறொரு தலைவரை வணங்கும் தொண்டர்களா? என்ற சந்தேகம் வந்திருக்கிறதாம். கடந்த சில தினங்களுக்கு சென்னை புறநகரில் ஒரு இடத்தில் நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பொதுவாகவே விஜய் கலந்து கொள்கிற படப்பிடிப்புக்கு வருகிற ரசிகர்கள், அவரை பார்க்கும் ஆசையில் திரண்டு நிற்பார்கள். ஆனால், அவரை நெருங்க முடியாதபடி காவல்காத்துநிற்பார்கள் அவரது பாடிகார்டுகளும், படப்பிடிப்புக் குழுவினரும்.அப்படிதான் இருந்தார்கள் சம்பவ தினத்தன்றும். ஆனாலும், திமுதிமுவென்று பாதுகாப்பாளர்களை தள்ளிவிட்டு விட்டு உள்ளே புகுந்தது ஒரு கும்பல். வந்தவர்கள் லொகேஷனில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் வந்தவர்கள் ரசிகர்கள்தானா அல்லது ரசிகர் என்ற போர்வையில் வந்த குண்டர்களா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க இவரின் வேலாயுதம் திரைப்படம் வெளிவரத்தயாராக இருக்கிற நேரத்தில
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையொப்பம் வேண்டுவதாகவும் அதற்க்கு விஜய் மறுத்துவிட்டதாகவும் செய்திகளை பரப்பி புலம் பெயர் தமிழர்களின் கோபத்தை இவர் மேல் திருப்புவதற்கும் முனைகின்றனர். எல்லாவற்றுக்கும் பின்னணியில் சூரியக் குடும்பம்தான் இருப்பதாகவும் கோடம்பக்க வட்டாரங்களில் முனுமுனுக்கிறார்கள்.
கையொப்பம் வேண்டச் சென்றவர்கள் திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களாம். அத்தொண்டர்களுக்கு தெரியாத ஈழத்தில் இனப்படுகொலையை ராஜபக்ஷ யாருடன் கூட்டு சேர்ந்து மேற்கொண்டார் எண்டு அப்பொழுது தங்களின் தலைவன் யாருடன் இருந்தாரெண்டு. இக்காரணத்துக்காகவே கடந்த தேர்தலில் படுதோல்வியை தளுவிக்கொண்டோமெண்டு இப்பொழுது எங்கிருந்து வந்தது ஈழ பாசம், ராஜபக்ஷவுடன் கைகுலுக்கி விருந்துண்டபொழுது அவன் குற்றவாளி எண்டு தெரியவில்லையா? கடந்த தேர்தலில் ஈழத்துக்கு ஆதரவாக நிண்ட அரசியல் தலைவர்களோடு சேர்ந்து அதிமுக கூட்டணியை ஆதரித்தவரிடம் எதிர் கூட்டணியில் இருந்தவாறு கையொப்பம் வேண்ட சென்றார்களாம். எப்படியாவது ஒரு சூழ்ச்சிவலையில் விஜயை தள்ளுவதற்கு பாரிய முயற்சி. ரசிகர்கள் என்ற போர்வையில் ஒரு கும்பல் அரசியல் கட்சி தொண்டர்கள் என்ற போர்வையில் ஒரு கும்பல் இவர்களின் திருவிளையாடல்களை புரியாதவர்களா மக்கள்.
ஒன்றுமட்டும் புரிகிறது விஜயை விடாமல் திரத்தும் மஞ்சள் துண்டுபோட்ட சனியன் யாரென்று?

No comments:
Post a Comment