| நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பட்டாளமாகச் சென்று பல நிகழ்வுகளில் பங்கேற்று மேடைகளில் முழங்கினார். இதன் போது பலர் போட்டி போட்டுக் கொண்டு தமிழிலும் பேசினார். இவர்களை யாழ் மக்கள் ஏதோ தேர்தல் பித்துப் பிடித்தவர்களாகவே பார்த்தனர். யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நாமல் ராஜபக்ச தமிழனையும் தமிழையும் கொலை செய்த தந்தைக்கு போட்டியாக தமிழில் உரையாற்ற முனைந்து தமிழைக் கொலை செய்தார். யாழில் புற்று நோய் சிகிச்சை வைத்தியசாலை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் முகமாக தெய்வேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை முனை வரையும் இடம்பெற்ற நடை பயணத்தின் இறுதி நாள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது, தமிழில் உரையாற்ற முனைந்த நாமல் ராஜபக்ச தமிழைக் கொலை செய்து உச்சரித்த வண்ணம் தமிழில் உரையாற்றினார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தால்ப்போல், அன்றைய முக்கிய நிகழ்வான ‘புற்றுநோய்’ மருத்துவமனை என்பதற்கு ‘பூத்து நோய்’ என உச்சரித்திருந்தார் இவர்கள் என்ன தமிழில் பேசியும் வீதியில் குத்தாட்டம் போட்டும் கச்சேரி நடத்தியும் இலவசங்களை வாரி வழங்கியும் ஏன் அபிவிருத்தி எனும் மாயையை தோற்றுவித்தும் கூட இதற்கெல்லாம் அடிபணியும் அரசியல் தமிழர்களிடம் இல்லை என்பதையும் தமிழ் மக்களின் அரசியல் பல தியாகங்களின் மத்தியில் வளர்க்கப்பட்டது என்பதையும் நிரூபித்துக் காட்டியுள்ளனர் |
Thursday, 4 August 2011
தேர்தல் பித்தில் தமிழைக் கொன்ற நாமல்! (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment