Wednesday, 31 August 2011

ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசு தலைவருக்கு வேண்டுகோள்விடுத்து, ஒரு மனதாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது. பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோடான கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல் அமைச்சர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

வாதாடுவதற்கு கட்டணத்தைப் பற்றி கவலையில்லை! மூன்று உயிர்கள் முக்கியம்! தமிழர்களுக்காக வருகிறேன்!- ராம் ஜெத்மலானி!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் செப்டம்பர் 9-ம் தேதி தூக்குத் தண்டனை’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தமிழ் உணர்வாளர்கள் தொடங்கிவிட்டார்கள்.
பூந்தமல்லி தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்திய நிலையில்... தமிழக ஆளுநர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, மூவரும் 'கருணை மனு’ அனுப்பிவைத்தார்கள்.
தமிழக ஆளுநராக அப்போது இருந்த ஃபாத்திமா பீவி இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். இதை எதிர்த்து பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். 'ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
மாநில அமைச்சரவையின் முடிவைத்தான் வழிமொழிய வேண்டும். எனவே, ஃபாத்திமா பீவியின் முடிவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!’ என்று பழ.நெடுமாறனுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சந்துரு சொல்ல... நீதிபதி அதனை ஏற்றுக்கொண்டு ஃபாத்திமா பீவியின் நிராகரிப்பைத் தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னால் இருக்கும் மனு ஒன்று மட்டுமே பாக்கி இருந்தது. 1999-ம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்ட கருணை மனுவை 12 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார் பிரதிபா பாட்டீல்!
ஆளுநர், குடியரசுத் தலைவர் இருவருமே கருணை மனுவை நிராகரித்த நிலையில்... மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழ் உணர்வாளர்கள் முடிவெடுத்தார்கள்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை அடிக்கடி வேலூர் சிறைக்குச் சென்று சந்தித்து வந்த இளம் வழக்கறிஞர்களான பாரிவேந்தன், பிரபு ஆகியோர், 'கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதன் பிறகு உடனடியாகச் செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்துவிடுவது...’ என்று பல மாதங்களுக்கு முன்பே வேலைகளை ஆரம்பித்தார்கள்.
டெல்லியில் காலின் கான்சிவேல்ஸ் என்ற வழக்கறிஞரை சந்தித்தனர். 'ஹியூமன் ரைட்ஸ் லா நெட்வொர்க்’ என்ற அமைப்பின் மூலம், நெடுங்காலமாக மனித உரிமை வழக்குகளுக்காக மட்டும் வாதாடி வருபவர் இவர்.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய பல விருதுகளைப் பெற்றவர். அவர் இந்த வழக்கில் வாதாடுவதற்கு ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, மும்பையில் இருக்கும் மொகித் சவுத்ரி என்ற இன்னொரு வழக்கறிஞர் குறித்த தகவல் கிடைத்தது. தூக்குத் தண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து வாதாடி வரும் மொகித் சவுத்ரியையும் இதற்காகக் கொண்டுவந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து, இந்த வழக்கறிஞர்கள் அவரையும் சந்தித்தனர். 'ராம்ஜெத்மலானி இருந்தால் நல்லது’ என்று அவர் ஆலோசனை சொன்னாராம்.
மனித உரிமை, தூக்குத் தண்டனை ஆகியவை குறித்து எத்தனையோ சாதகமான விஷயங்கள், தீர்ப்புகளை நாங்கள் எடுத்துவைக்கலாம். ஆனால், ராம்ஜெத்மலானிதான் நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமாகவும்... கூடுதல் கடுமையாகவும்கூட வாதாடுவார்.
கடுமையாகக் கடைசி வரைக்கும் போராடுவார்’ என்று மொகித் சவுத்ரி சொல்ல... அவருடன் பேச முடிவானது. 'எனக்கு ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. எனவே, இதில் ஆஜராக முடியாது. அதுவும் சென்னைக்கு வர இயலாது’ என்று ஜெத்மலானி சொன்னதும்... இந்த வழக்கறிஞர்கள் வைகோவை சந்தித்து விஷயத்தைச் சொன்னார்கள்.
இது ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்தது!
ஜெத்மலானியைத் தொடர்புகொண்ட வைகோ, ''மூன்று தமிழர்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.கோடிக் கணக்கான தமிழர்களின் சார்பாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மறுப்பு ஏதும் சொல்லிவிடாதீர்கள்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அழுத்தம் தர... அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.
மறுநாள் வேலூர் சிறையில் பேரறிவாளனை சந்தித்த வைகோ, நம்பிக்கையுடன் இருங்கள். விடுதலை ஆவீர்கள்...’ என்று சொல்லிவிட்டு வந்தார்.
இது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன், 23-ம் தேதி ராம்ஜெத்மலானியின் வீட்டில் நீண்ட நேரம் ஆலோசனைகள் நடந்தன. ''எந்தத் தேதியாக இருந்தாலும், அனைத்து வழக்குகளையும் தள்ளிவைத்துவிட்டுத் தமிழர்களுக்காக வருகிறேன்!'' என்று ஜெத்மலானி சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில்தான் 25-ம் தேதி மூவரின் தூக்கையும் உறுதி செய்து மத்திய அரசில் இருந்து கடிதம் வந்தது. மீண்டும் வைகோ உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானியை சந்தித்தனர்.
அனைத்துத் தகவல்களையும் விரிவாகக் கேட்டுக்கொண்ட ஜெத்மலானி, ''இவர்கள் மூவரையும் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது'' என்றார் நெகிழ்வாக. ''மூன்று தமிழர்களின் உயிர்தான் எனக்கு முக்கியம். வாதாடுவதற்கான கட்டணத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை!'' என்று சொன்னாராம் ஜெத்மலானி.
ராம் ஜெத்மலானி, காலின் கான்சிவேல்ஸ், மொகித் சவுத்ரி ஆகிய மூவரது வாதங்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரது உயிரைக் காக்குமா... என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்!
ஜூனியர் விகடன்

மரண தண்டனையிலிருந்து உயிர்களைக் காப்பதற்குப் போராடும் நாங்கள் அதற்காக வேறு உயிர்களை இழக்கக்கூடாது – பொன். பாலராஜன்

மரண தண்டனையிலிருந்து உயிர்களைக் காப்பதற்குப் போராடும் நாங்கள் அதற்காக வேறு உயிர்களை இழக்கக்கூடாது. இவ்வாறு நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன். பாலராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த அரசின் ஏற்பாட்டில் இன்று ரொறன்ரோ நகரிலுள்ள கனடியத் தமிழ்க் காங்கிரஸ் மண்டபத்தில் இடம்பெற்ற செல்வி. செங்கொடியின் வணக்க நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு பேசுகையில்,
தமிழினம் இன்று ஒரு புதிய வரலாற்று யுகத்திற்குள் புகுந்து கொண்டிருக்கிறது எனவும் இந்த மூவரின் தூக்குத் தண்டனை மனு நிராகரிப்பானது உறங்கிக் கிடந்த தமிழினத்தை மீண்டும் தட்டியெழுப்பியுள்ளது எனவும் தமிழக தொப்புட்கொடியுறவுகளிற்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லையென்றும் இந்தப் பொன்னான தருணத்தில் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென மன்றாட்டமாகக் கேட்பதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உரையாற்றிய முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழத்திற்காக தன்னை அற்பணித்துச் செயலாற்றி வருபவருமான திரு. ஈழவேந்தன் அவர்கள் பேசுகையில்,
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் பிறந்த மண். அந்த மண்ணிலே பிறந்த செங்கொடி எப்படி அண்ணாத்துரையால் காஞ்சி பெருமையடைந்ததோ அதே போன்றதொரு பெருமையை அந்த மண்ணிற்குக் கொடுத்து விட்டார் என்று தெரிவித்தார்.
நாடு கடந்த அரசின் பிரதிப் பிரதமரான கலாநிதி ராம் சிவலிங்கம் இந் நினைவு நிகழ்வில் பேசுகையில்,
நாடு கடந்த அரசின் ஆழ்ந்த அனுதாபத்தை செல்வி செங்கொடியின் குடும்பத்தாருக்கும் இந்த ஆழ்ந்த துயரில் மூழ்கிப் போயிருக்கின்ற தமிழக உறவுகளிற்கும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பேசிய தமிழ்த் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவரான திரு. துரைராஜா அவர்கள் பேசுகையில்,
விடுதலைப் போராட்டத்தில் பல்லாயிரம் மக்களைப் பலி கொடுத்த நாங்கள் தமிழக உறவுகளை மன்றாட்டமாகக் கேட்பதெல்லாம் உங்கள் உணர்வு எங்களிற்கு தேவை. தயவு செய்து உங்கள் உயிர்களை கொடுக்கும் நிகழ்வுகளை இனியும் நாங்கள் சந்திக்க முடியாது என வேதனை ததும்ப உரையாற்றினார்.
கனடியத் தமிழ்க் காங்கிரஸின் சார்பில் பேசிய திரு. துசி துரைரட்ணம் அவர்கள் அங்கு பேசுகையில்,
கனடியத் தமிழர்களின் சார்பில் செங்கொடியின் குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டதோடு, மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களுடன் சேர்ந்து கனேடியத் தமிழர்கள் மரண தண்டணை ஒழிப்பை தமிழ்நாட்டில் மாத்திரமல்ல, உலகிலேயே நிறுத்தக் குரல் கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
நாடு கடந்த அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோ அன்ரனி, சண் உள்ளிட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் பல பொது அமைப்புக்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் தங்கள் அஞ்சலியை நேரடியாகச் செலுத்தினர்.
மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரை இடம்பெற்ற நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலியை செல்வி செங்கொடிக்கு உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.

மூவரின் விடுதலை வேண்டி பிரித்தானியாவில் இந்தியத் தூதரகம் முன் நடைபெற்ற போராட்டம். (வீடியோ இணைப்பு)


பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக இன்று (30-08-2011) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.


இப்போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றின மக்களுமாக பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டிருந்ததை காண முடிந்தது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தமது இளமை வாழ்வை கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் கழித்த பின்னரும், அவர்களுக்கு கொஞ்சமும் மனிதனேயமற்ற முறையில் தூக்குத்தண்டனைக்கு உட்படுத்துமாறு வழங்கப்பட்ட நீதியற்ற தீர்ப்பினை எதிர்த்து, உலகெங்கும் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் போராட்டங்களின் வரிசையில் லண்டனிலும் இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தத்து.

இப் போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “இந்திய அரசே நீதியற்ற தீர்ப்பை மாற்று” “தூக்குத் தண்டனையை ரத்துச் செய்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்ககமிட்டனர்.

அத்தோடு கைகளிலே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உருவப்படங்கள், மற்றும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தாங்கி நீதிவேண்டி நின்றனர்.

இப் போராட்டத்தில் முத்தாப்பாய் தமிழகத்தில் இம் மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து வேள்வித் தீயாகிய வீரமங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப் படத்திற்கு அகவணக்கம் செலுத்தி மலர் அஞ்சலியும் செய்யப்பட்டது.

இதே வேளை வீர மங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப்படங்களும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களின் கரங்களில் பரவலாகக் காணமுடிந்தது.

இப் போராட்டத்தின் போது தற்போது தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் மூவரில் ஒருவரான சாந்தனின் சகோதரி அவர்களும், தமிழ் சொலிடாரிற்ரி அமைப்பின் பிரதிநிதி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தயாபரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ம.தி.மு.க கட்சி சார்பில் இளங்கோ, ஆகியோர் உரையாற்றினர்.

இப் போராட்டத்தின் போது தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யக் கோரும் மனு ஒன்று இந்திய தூதரக அதிகாரியிடம் முருகனின் சகோதரியினால் கையளிக்கப்பட்டது.

இன்று மாலை 3:00 மணிக்கு ஆரம்பமான இப் போராட்டமானது மாலை 7::00 மணியளவில் தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் கோசத்துடன் நிறைவு பெற்றது.

இப் போராட்டம் லண்டனின் மத்திய பகுதியில் மாலை நேரத்தில் நடைபெற்றதினால் அதிகளவான வேற்றின மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








செங்கொடியின் உடல் இன்று அடக்கம் -செங்கொடியின் புரட்சிகர நடனம்! (வீடியோ இணைப்பு)


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து பலியான செங்கொடியின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரில் இன்று (31.08.2011) நடக்கிறது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கடந்த 28.08.2011 அன்று காஞ்சீபுரத்தில் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த இளம்பெண் செங்கொடி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தீக்குளித்து இறந்தார்.

தகவல் கிடைத்ததும் பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள், சினிமா உலக பிரமுகர்கள் ஏராளமானோர் காஞ்சீபுரத்திற்கு விரைந்து வந்து செங்கொடிக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் சொந்த ஊரான மேல்கதிர்பூர் மங்களம்பாடி கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள மக்கள் மன்ற அலுவலகத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் சுமார் 7 மணி நேரம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

செங்கொடியின் உடல் அடக்கம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்ததால் உடல் அடக்கத்தை ஒரு நாள் தள்ளிவைக்க மக்கள் மன்றம் முடிவு செய்தது. அதன்படி நேற்று வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தது. 8 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை அடுத்து செங்கொடியின் உடல் அடக்கம் இன்று (31.08.2011) நடக்கிறது. இதில் பங்கேற்க கட்சி தலைவர்கள், தமிழர் அமைப்பு நிர்வாகிகள் காஞ்சீபுரத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

செங்கொடி பங்கேற்ற புரட்சிகர நடனம்!

ஏராளமானோர் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற செங்கொடியின் சடலம்: தலைவர்கள் அஞ்சலி


தூக்கு தண்டனையை தடுக்கக்கோரி தீ குளித்து இறந்த இளம்பெண் செங்கொடியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஊர்வலமாக அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜிவ் கொலையில் 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார். மரணத்துக்கு காரணமாக அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. செய்தி அறிந்து ஏராளமானோர் திரண்டு வந்து கதறி அழுதனர்.

நள்ளிரவில் அங்கு வந்த மதிமுக தலைவர் வைகோ, நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சீமான், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் செங்கொடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் வீரப்பன், எஸ்.பி. மனோகரன் அங்கு வந்தனர்.

அவர்களிடம், பொது மக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக பொது இடம் ஒதுக்க மக்கள் மன்றத்தினர் அனுமதி கோரினர். அதற்கு அவர்கள், மறுப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதையடுத்து செங்கொடி உடல் ஏற்றப்பட்ட வாகனம் ஏராளமானோர் புடைசூழ மதியம் 1 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் இரவு 7 மணிக்கு கீழ்கதிர்ப்பூர் கிராமத்திற்கு சென்றது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. செங்கொடியின் இறுதி சடங்கு நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது.





மும்பையில் நடந்ததாக பரபரப்பு: நயன்தாரா-பிரபுதேவா ரகசிய திருமணம்?


நயன்தாரா, பிரபுதேவா திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்ததாக
பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்தனர். பொது விழாக்களில் கை கோர்த்து பங்கேற்றனர். நயன்தாராவை மணப்பதற்காக பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் இரு வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார்.

இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என் எதிர்பார்க்கப்பட்டது. மும்பையில் அல்லது திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. நடிகர், நடிகைகள், நண்பர்கள், விருந்தினர்களை அழைத்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது யாரையும் அழைக்காமல் ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இத்திருமணத்தில் இருவரின் பெற்றோர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து வேள்வி வளர்த்து இந்த திருமணம் நடந்தது என்கின்றனர்.

ரம்லத்துக்கு பிறந்த மகன்கள் மீது பிரபுதேவா இன்னும் பிரியமுடன் இருக்கிறார். அடிக்கடி அவர்களுடன் போனில் பேசுகிறார். விவாகரத்தான போது மகன்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள சொத்து மற்றும் வீடுகளை எழுதி கொடுத்துள்ளார்.

நயன்தாராவுடனான திருமணத்தை அழைப்பிதழ்கள் அச்சிட்டு ஆடம்பரமாக நடத்தினால் மகன்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியதால் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

திருமணத்தை மும்பை ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் இந்த திருமணத்தை உறுதி செய்ய முடியவில்லை. பிரபுதேவாவுக்கு நெருக்கமானவரிடம் இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் திருமணம் நடந்ததாக மும்பையில் வதந்தி பரவி உள்ளது. அதில் உண்மை இல்லை. அடுத்த மாதம்தான் அவர்கள் திருமணம் நடக்கும் என்றார்.

தூக்குத் தண்டனையை இரண்டு மாதங்கள் நிறுத்தி வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான  மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, தூக்குத் தண்டனையை எட்டு வாரங்கள் நிறுத்திவைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடுமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மேலும், தூக்குதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மூவரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகிறது.
மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர்.
துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வைகோ, அற்புதம்மாள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் நீதிமன்றில் குழுமினர்.

மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூக்கில் போட தடை விதிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கொண்டாடினர். மேலும், தூக்குக்கு எதிராக தமிழகமெங்கும் போராடியோர் பட்டாசுகள் கொளுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில்,
மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளமையானது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.
முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருட கால தாமதம் மனிதாபிமானமே இல்லாத செயல்!- உயர்நீதிமன்றத்தில் ஜேத்மலானி ஆவேசம்

ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப்படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை.
ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11 வருடங்கள் ஆகி விட்ட பின்னர், திடீரென கூப்பிட்டு உன்னை நாளை சிறையில் போடப் போகிறோம் என்று சொல்வது எந்தவகையில் நியாயம். இது மனிதாபிமானமே இல்லாத ஒன்று.
இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்டு நிச்சயம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. அடிப்படையிலேயே தவறு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கு இதில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 வருடங்கள் சிறையில் அடைபட்டிருப்பதே ஒருவருக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும் விஷயமாகும். இந்த வழக்கில் மிகப் பெரிய உளைச்சலை சந்தித்த ஒருவரை தூக்கில் போடும் முடிவை அரை மணி நேரத்தில் எடுத்துள்ளனர். இதை சாதாரணமாகஎடுத்துக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார் ராம்ஜேத்மலானி.
இதையடுத்து கருணை மனுவை நிராகரிக்க ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

பேரறிவாளனின் இளமைக் காலங்கள்... (படங்கள் இணைப்பு)






Tuesday, 30 August 2011

கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் இன்று 4வது நாளாக உண்ணாவிரதம் (படங்கள் இணைப்பு)


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நிறைவேற்றவிருக்கும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகிய மூன்று பேர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். அதில் நக்கீரன் ஆசிரியர், ‘ நக்கீரன்’ கோபால் பங்கேற்றார்.

மூவரின் தூக்குத்தண்டனைக்கு எதிராகவும், உண்ணாவிரதம் இருக்கும் மூவருக்கு ஆதரவாகவும் நக்கீரன் கோபால் குரல் கொடுத்தார்.அவர், ’’பொதுவாக நமக்கெல்லாம் இல்லாத தைரியம் இந்த மூன்று பேருக்கும் இருக்கிறது. இதை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

யாராவது ஒரு கல்லெறியனுமே; அந்த கல்லு இந்த மூன்று பேரின் உருவமாக வந்திருக்கிறது. இன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தேகம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உண்ணாநோன்பு இருப்பதில் கஷ்டம் இருக்காது. ஆனால் உடம்பு குண்டாக இருப்பவர்கள் உண்ணாநோன்பு இருப்பதில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அப்படி இருந்தும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இது பெரிய விசயம். ஒரு விடியலை நோக்கி இந்த மூவரும் உண்ணாவிரதம் இருப்பதை தமிழகமே இன்று கவனிக்கிறது.

தூக்கில் போட வேண்டும் .மரண தண்டனையை தூக்கில் போட வேண்டும். இன்றைக்கு ஜனநாயம் பேசுகிறோம். காந்தியம் பேசுகிறோம். காந்திய முறையில்தான் நாம் சுதந்திரத்தை வாங்கியிருக்கோம் என்று படிக்கிறோம்; சொல்கிறார்கள். காந்திய வழியில்தான் நம் நாடு நடக்கிறது என்கிறார்கள்.

ஆனால், அரசாங்கம் இன்று மூன்று பேரை காட்டுமிராண்டித்தனமாக தூக்கில் போட்டுத்தான் ஆவேன் என்று தேதியை குறித்திருக்கிறது.நாம் காட்டுமிராண்டிகள்தான் என்று சொல்லாமல் சொல்கின்ற ஒரு நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றோம்.

ஒரு அன்னா ஹசாரே என்கிற காந்தியவாதி உண்ணாவிரதம் இருக்கிறார். பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை விவாதிக்கிறார்கள். இந்த அளவிற்கு பாராளுமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததற்கு காரணம், மீடியாதான்.

மீடியாவின் முயற்சியால்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. இதனால்தான் மத்திய அரசே பயந்து பாளுமன்றத்தில் லோக்பால் நிறைவேற்றியிருக்கிறது. இதே போல், இந்த மூன்று சகோதரிகளின் உண்ணாவிரதத்தை மீடியாக்கள் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். பிரிவிணை பார்க்காமல் மீடியாக்கள் இந்த விசயத்தில் ஒன்றுபடவேண்டும்.

கால அவகாசம் குறைவாக இருப்பதால் இந்த நிமிடத்தில் இருந்து உறுதிமொழி எடுத்து மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் மீடியாக்கள். ஏன் என்றால் விட்டுவிட்டால் பிடிக்க முடியாது.செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இந்த விவகாரம் ஆகிவிடக்கூடாது. அதனால் அன்னா ஹசாரே மாதிரியான பொதுவான ஒரு நபரை வைத்து போராடவும் வேண்டும்.

தூக்குதண்டனையை தடுப்பதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதநேயமிக்க அனைவரையும் ஒன்றினைத்து பெரும் போராட்டமாக ஆரம்பித்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட எழுச்சியால்தான் தூக்குத்தண்டனையை நிறுத்த முடியும்.

மூன்று உயிர்களுக்காக நேற்று ஒரு உயிர் தீக்குளித்து இறந்தது. இப்போது மூன்று உயிர்கள் போராடிக்கொண்டிருக்கிறது.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அனைத்து பத்திரிகை முதலாளிகளையும் சந்தித்து இந்த போராட்டத்தை மக்களிடையே பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று கெஞ்சிக்கேட்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

நிச்சயமாக நக்கீரன் மற்றும் நக்கீரன் சார்ந்த ஊடகம் இந்த பிரச்சனையை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச்செல்லும். மக்கள் எழுச்சி மூலமாக இந்த மூன்று பேரின் மரணதண்டனை நிச்சயமாக நிறுத்தப்படும். நான்காவது நாளாக இந்த பெண்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். இந்த உண்ணாநோன்பு, வெற்றி பெற்ற உண்ணா நோன்பாக முடியும் என்று நம்புகிறேன்’’ என்று பேசினார்




[

கோவையில் பதட்டம்: தூக்குக்கு எதிராய் நடுவன் அரசு அலுவலகங்கள் முற்றுகை! பரபரப்பு காணொளி இணைப்பு (வீடியோ இணைப்பு)









கோவையில் இன்று மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராய் சட்டக்கல்லூரி மாணவர்கள் அணி அணியாக பிரிந்து ஒவ்வொரு நடுவன் அரசு அலுவலகங்களாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று கோவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததற்கு இணங்க, அனைத்துக்கட்சியினரும் தொடர்வண்டி நிலையம் அருகில் குவிந்திருக்க, அங்கு காவல் துறையும் பெரும்படையை குவித்திருந்தது.

இந்த நிலையை மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கோவை மாநகரில் அமைந்துள்ள நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அணி அணியாக படையெடுத்தனர்.

முதலில் ஒரு அணி அவினாசி சாலை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள கடவு சீட்டு அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. இன்னொரு அணியோ கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள மண்டல வருமான வரி ஆணையர் அலுவலகத்தினை முற்றுகையிட்டது.

மேற்படி நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிந்திருக்கவில்லை. காவல்துறையின் கவனம் தொடர்வண்டி நிலையத்திலேயே இருந்தது. மாணவர்கள் தொடர்ந்து முக்கிய சாலை சந்திப்புகள் வழியாக நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பாதசாரிகள், பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பதட்டம் அடைந்தனர். என்ன நிகழ்கிறது என்று யாருக்கும் அங்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் கோவை மாநகரில் நாள் முழுதும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

எனது பிள்ளையை விடுதலை செய்யுங்கள் � முருகனின் தாயார் கதறல் (வீடியோ இணைப்பு)




லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ரா அவர்களின் மனதை உருக்கம் பேட்டி! (ஓடியோ இணைப்பு)


அப்பா அம்மா இல்லையென்றால் எவ்வளவு கஸ்டமென எல்லோருக்கும் தெரியும் என் தந்தையைக் காப்பாற்றி தாருங்கள் என உருக்கமாக லங்காஸ்ரீ வானொலி மூலம் கேட்டிருக்கின்றார் முருகன் நளினி தம்பதிகளின் மகள் ஹரித்ரா.


எனது தந்தை இதுவரை சிறையில் இருந்தாலும் எனக்கும் அம்மா அப்பா இருக்கின்றார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது தந்தையைக் காக்க தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து போராட்டம் நடத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் முருகன்-நளினி தம்பதியின் மகள் ஹரித்ரா.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ரா. நளினி கைது செய்யப்பட்டபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். வேலூர் சிறையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை பின்னர் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வளர்ந்து வந்தது. இப்போது ஹரித்ராவுக்கு 20 வயதாகிறது. தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தனது தந்தை முருகனை தூக்கில் போடப் போகிறார்கள் என்ற தகவல் அறிந்தது முதல் நிம்மதியில்லாமல் பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கிறார் ஹரித்ரா.

மேலும் ஹரித்ரா கூறுகையில், நான் சிறையில் பிறந்தது முதலே பல்வேறு சிரமத்தை சந்தித்து வளர்ந்து வந்துள்ளேன். ஆரம்பத்தில் பெற்றோரைப் பிரிந்து பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்தேன். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிந்து வாழ்ந்து வரும் நான் 12 வயதாக இருந்தபோதுதான் கடைசியாக அவர்களைப் பார்த்தேன். அதன் பிறகு என்னால் அவர்களை சந்திக்க முடியவில்லை.

பெற்றோரைப் பார்க்க முடியவில்லை. அவர்களுடன் இருக்க முடியவில்லை. அவர்களை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். கூட இருந்து வாழக் கொடுத்து வைக்கவில்லையே என்று கவலையாக இருக்கிறது. இத்தனை நாட்களாக அவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் இருந்து வந்தேன். இப்போது அதையும் கூட பறிக்கப் பார்க்கிறார்களே. இது கொஞ்சமும் நியாயமில்லை.

இதை விட ஒருவருக்கு கொடுமையான விஷயம் எதுவும் இல்லை. யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். வேறு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

எனது தந்தையை தூக்கில் போடப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது முதல் நான் தூக்கமின்றி தவித்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதா எனது தந்தையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இந்தியா வர நான் விசா கோரி விண்ணப்பித்துள்ளேன். எனது தந்தையைக் காப்பாற்றக் கோரி அங்கு பலர் போராடி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த நானும் விரும்புகிறேன் என்றார் உருக்கமாக.

நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வைகோ முழக்கம்


சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் நேற்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,


இந்த இலக்கிய அமைப்புகள் எதற்க்காக நடத்தப்படுகிறது என்பது பலருக்கு புரிவதில்லை. தமிழர்களுக்கு உள்ள வரலாறு, பண்பாடு, வீரம், மேன்மை, ஒழுக்கம், நீதி போன்ற உயரிய பண்புகளை எடுத்துக்காட்டவும், அந்த குணங்களை நம் சமுகம் கடைபிடிக்கவும் எடுத்துச் சொல்வதுதான் இந்த விழாவின் நோக்கம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய முன்னோடி நாடுகளில் வாழ்ந்த மக்கள் எல்லாம், ஆடைகள் அணியாமல் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், நாம்முடைய சோழ நாட்டில் மக்கள் பகலில் அணிவதற்கு பட்டாடையும், இரவில் அணிவதற்கு பருத்தி ஆடையும் பயன்படுத்தினார்கள் என்று நமக்கு சொல்லுகிறது சிலப்பதிகாரம்.

உலகத்துக்கே ஆடையணியும் நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நம் தமிழ் பெண்கள், இன்றும் உலகத்துக்கே ஆடைகள் கொடுப்பது தமிழகம் தான், ஆனால், சேனல்-4 தொலைக்காட்சியில் இசைப்பிரியா என்ற அந்த தமிழ் சகோதரியை ஆடைகளை அவிழ்த்து காட்டும் கட்சிகளை காட்டும் பொது நம் ரத்தம் கொதிக்கிறது.

சிலப்பதிகாரத்தில், குற்றமில்லாத தன் கணவனை குற்றவாளி என்று நினைத்து அந்த பாண்டியமன்னன் நெடுஞ்செழியனின் குற்றமிழைத்த காரணத்தால் அவன் நாடு நகரமெல்லாம் எரித்தால் கண்ணகி.

ஆனால், இன்று தன் சகோதரன்..., உடன் பிறவா சகோதரன், நம் தமிழ் சகோதரன், பேரறிவாளன்.... “குற்றமற்றவன்” என்பதை மெய்ப்பிக்க வேண்டி காஞ்சிபுரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்கிற ஒரு தமிழ் சகோதரி.

அந்த பத்தினி பெண்ணான கன்னகியில் சாபத்திலும் நீதியிருந்தது... இந்த செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது.... நீதி வென்றே தீரும், நம் தேசபிதா காந்தியவர்கள் 1931 வருடத்திலேயே தூக்கு தண்டனை கூடாது என்றார்.

பண்டித நேரு அவர்களும், ஒரு மனிதனை தேதி குறித்து வைத்து கொல்லும் கொடுரம் கூடாது என்றார்கள். 1941-ம் வருடத்தில் இந்திய அரசியல் சட்ட அமலாக்க விவாதத்தில் பேசிய அண்ணல அம்பேத்கார் அவர்களும் தூக்கு தண்டனை கூடாது என்றார்கள்.

இன்று உலகில் உள்ள 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டார்கள். ஆனால் நம் நாட்டில் கூட நீன்ட நாட்களாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை.

அன்று திருப்பெரும்புதூரில் நடந்த சம்பவத்திற்கும் இந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் சம்பந்தமில்லை..... முதலில் இதே வழக்கில் 24 நபர்களுக்கு தூக்கு கொடுத்தார்களே.

பின்னர் எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று முடிவு செய்யப்பட்டதோ அது போலவே, இவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பொய்யானது. அதை நிருபிக்க இன்னும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

அன்று பாண்டிய மன்னன் அரண்மனையில் நடந்த கொடூரம் இப்போது தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது.. தமிழக முதல்வர் அவர்களால் இதை தடுக்கும் வாய்ப்புள்ளது... நாடே இப்போது முதல்வரின் முடிவை எதிர்பார்க்கிறது’’என்று பேசினார்

என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்று நம்பிகையுடன் செல்கிறேன் (படங்கள் இணைப்பு)


21 வருட வாழ்க்கை சிறை கம்பிகளுக்குபின்னால் தமது வாழ்கையை கழித்துவிட்ட மரண தண்டனை தீர்க்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு 11 வருடங்கல்லுக்கு முன் இந்திய ஜனாதிபதி அனுப்பட்ட கருணை மனுஇந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு...அவர்கள் தண்டனை ஊர்ஜிதப்பட்டு தூக்குகையிற்றை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், உலகத்தில் மிக பெரிய ஜனநாயகநாடாகவும், ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் கேட்டு நிற்கும் நாடாகிய இந்தியஇந்திய மரண தண்டனையை நிறைவேற்றலாமா?

11 வருடங்கள், இந்திய ஜனாதிபதியிடம் கருணை மனுஅனுபிவைகப்பட்ட பின், 3ஜனாதிபதிகளுக்கு பின் இன்றைய ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டிலால் பேரறிவாளன், சாந்தன், முருகன் முன்வைத்த கருணை மனுநிரகரித்தப்பட்டது.

21 வருட சிறை தண்டனைக்கு பின் இந்த 3தமிழர்களுக்கு தூக்கு தண்டனை தீர்மானமான பின் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், தூக்கு தண்டனைக்கு எதிரானஅமைப்புகள், தமிழ்இளைஜர் அமைப்புகள் என்று எல்லோரும் கட்சி பாகுபாடின்றி தமிழகம் என்றும்போராட்டத்தில் இறங்கினார்கள். மனித சங்கிலி போராட்டம், மோட்டார் வண்டி ஊர்வலப்போரட்டம், உண்ணாவிரதப்

போராட்டம்என்று தமிழகம் எங்கும் போராட்ட களமாக மாறுகிறது.

மீண்டும்நீதிமன்றங்கள் முன் இந்திய முன்னிலை சட்டத்தரணிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தீர்ப்பை தடுத்துநிறுத்தம் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அதேநேரத்தில் முன்று இளம் தமிழ் பெண் சட்டத்தரணிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்குதித்தார்கள்.

இந்தபோர்ரட்டங்களுகிடையே காஞ்சிபுரம், ஊரிகையை சேர்ந்த செங்கொடி என்ற ௨௨ வயது சகோதிரி "தோழர்முத்துகுமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்றுநம்பிகையுடன் செல்கிறேன்" என்று எழுதிவைத்து விட்டு தன்னை தீக்கிறைக்கு இரையாகி ஈகைஏந்தினால் இந்த தமிழ் பெண்.

இந்தஇளைஜர்கள் தமிழ் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்தும் தமது உயிரை தியாகம் செய்துகொண்டிருகிறார்கள். உங்கள் உன்னதமான உயிர் இந்த தமிழ் மண்ணுக்கு தேவை, தமிழ் மக்களின் விடுதலைக்கு தேவை, உங்கள் வாழ்வு தான் அடுத்த விடுதலைஅடைத்த சமுதாயத்தை உருவாக்கம் உதவும். இந்த ௩ தமிழர்களின் விடுதலைக்காக போராடநீங்கள் வேண்டும், தியாகங்கள்போதும் நாம் ஒன்ற இருந்து போராடுவோம் என்று எமது தமிழக உறவுகளுக்கு பிரான்ஸ்தமிழீழ மக்கள் பேரவை சார்பாகவும் உலக தமிழ் மக்கள் சார்பாகவும் கேட்டு கொள்கிறோம்.

இன்றுஜனநாயத்தில் முன்னோடிய இருக்கும் நாடுகளில் எல்லாம் மரண தண்டனை சட்டத்தில் இருந்துஅகற்றப்பட்டு கொலைக்கு தண்டனை கொலை அல்ல என்ற புனித யதார்த்தத்தின் அடிப்படையில்மரண தண்டனை அழிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன்பல நிரபராதிகள் இந்த சட்டங்களினால் பாதிக்கப்படுகிறார்கள்.

பலஅரசியல் காரணங்கள், நீதிமன்றங்களில், போலீஸ்இடையே அரசில் கட்சிகளின் மேலாட்சி குற்றம் செய்யாதவர்களை எல்லாம் குற்றவாளிகளாககாணப்பட்டு தண்டிகப்படுகிரார்கள். இன்று பல ஜனநாய நாடுகளில் நீதி துறையில் இருந்துஅரசு பிரிக்கப்பட்டு தனித்தன்மையோடு இயங்குகிறது.

இந்த புது உலகத்தில் கால் பதிக்க நினைக்கும்இந்திய, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம் கேட்டுநிற்கும் இந்திய இன்று இந்த மரண தண்டனை என்ற கோரமான தண்டனையில் இருந்து விடுபட்டுபல ஜனநாயக நாடுகள் போல் மரண தண்டனையை தமது சட்ட புத்தகத்தில் இருந்து அகற்றவேண்டும்

மேலயதய நாடுகளில் revising கமிட்டி என்று தீர்ப்புகளில் பிழைகள் இருக்குமானால்அதை மறு பருசீலனை அளிக்க பல வழிகள் உள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாடாகி இந்தியாவில்சட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆளுமை உள்ள நிலையில் ஒரு நிரபராதி தன்னை காப்பாற்றிகொள்ளை என்ன வழி இருக்கிறது என்பது மிகப்பரிய கேள்வி.

இதை மக்கள் சிந்தனையில் எடுத்து கொண்டு சட்டமாற்றங்களை உருவாக்க போராட வேண்டும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து இவர்களுக்கு ஒரு நியமானதீர்ப்பு கிடைக்கும் வரை, உயிர் தியாகங்களை விட்டு விட்டு தமிழர்கள்எல்லோரும் போராட வேண்டிய நேரமிது.





லிபியாவில் கடாபியின் வீழ்ச்சி - மௌனம் காக்கிறார் மகிந்த


லிபியாவின் தலைநகர் திரிபொலி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், புரட்சிப்படையினர் அமைத்துள்ள இடைக்கால தேசிய சபை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.

சிறிலங்கா அரசுக்கு நெருங்கிய நட்பு நாடாக லிபியா இருந்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், லிபிய அதிபராக இருந்த கேணல் கடாபிக்கும் இடையில் மிகநெருங்கிய நட்புறவும் இருந்து வந்தது.

லிபியாவுக்காக குரல் கொடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கம் அங்கு புரட்சிப்படையினர் கை ஓங்கத் தொடங்கியதும் அடக்கி வாசிக்கத் தொடங்கியிருந்தது.

திரிபொலியின் வீழ்ச்சியடைந்து பல நாட்களாகியுள்ள போதும் சிறிலங்கா அரசாங்கம் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமாக உள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா அரசஅதிகாரி ஒருவரிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியதற்கு, தாம் நிலைமைகள அவதமானித்து வருவதாக பதிலளித்துள்ளார்.

லிபியாவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை தேசிய சபையை இன்னமும் ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியுள்ள அந்த அதிகாரி, சிறிலங்காவின் முடிவு பின்னரே அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை லிபியாவில் கேணல் கடாபியின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட ரீதியாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எல்லை தாண்டக்கூடாது : நடிகை ராதா

கோ பட நாயகி கார்த்திகா அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல பெயரை எடுத்திருந்தார். தற்போது அவரை தேடி நல்ல பல வாய்ப்புக்கள் வந்துகொண்டிருக்கிறனவாம். இதனால் கார்த்திகாவின் அம்மா, முன்னாள் நடிகை ராதா, கார்த்திகாவுக்ககு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், கர்த்திகாவை பெரிய டான்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. அதே சமயம் அவளுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்குச் சுதந்திரமும் கொடுத்திருந்தோம். அவளும் சிறு வயதிலிருந்தே முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொண்டாள்.

படிப்பிலும் சுட்டி அவளுடைய முதல் பரதநாட்டிய அரங்கேற்றம் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் நடைபெற்றது. பல சினிமா வாய்ப்புகள் வந்தன. தமிழில் நல்ல டைரக்டர்இ நடிகர் படத்தில் அறிமுகமாக வேண்டும் என விரும்பினேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும, எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டக்கூடாது என்று நடிகை கார்த்திகாவுக்குஇ அவரது அம்மா ராதா எச்சரித்துள்ளாராம்

ஒரு நூலேனும் தலை அசைந்தால் சங்குதான். (வீடியோ இணைப்பு)


சிலரது முட்டாள்தனாமான செயற்பாடுகளுக்கு இந்த வீடியோவும் ஒரு சிறந்த உதாரணம். ரயில் தண்டவாளத்தின் கீழ் படுக்கிறான் ஒரு இளைஞன்.. மேலாக ரயில் கட கட வென 10 விநாடிகள் பயணிக்கிறது… அந்த 10 விநாடிகளும் இளைஞனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.. ஒரு நூலேனும் தலை அசைந்தால் சங்குதான்.

காமாரா முன் இந்த முட்டாள் தனமான விளையாட்டை மேற்கொள்ளுகிறான் இந்த இளைஞன். இதைப்பார்க்கும் போது பந்தயத்துக்காக சக நண்பர்கள் முன்னிலையில் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. இருந்தாலும் இதைப்பார்ப்பவர்கள் தயவுசெய்து இவ்வாறு முயற்சிக்க வேண்டாம்.

அரிய விண்கல் விழும் காட்சி வீடியோவாகப் பதிவு ! (வீடியோ இணைப்பு)




பெரு நாட்டில் ஒரு மலைப்பிரதேசக் கிராமம் ஒன்றில் விண் கல் வீழ்வதை ஒருவர் வீடியோவில் பிடித்துள்ளார். வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டு வீழ்கிறதா இல்லை பயணிகள் விமானம் வீழ்கிறதா என்று கூடத்தெரியாமல், அந் நபர் அதனை வீடியோ எடுத்துள்ளார். ஆனால் பின்னர் தான் அது ஒரு சிறியரக விண் கல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகுந்த பிரகாசத்துடன் எரிந்தவண்ணம் வந்து பூமியோடு மோதிய அந்த விண்கல்லினால் தற்போது காட்டுத் தீ மூண்டுள்ளதாக அறியப்படுகிறது. பூமியில் இக் கல் வந்து விழும் போது சுமார் 40 அடி விட்டம் கொண்ட தாக அது இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


அந்த விண் கல் விழுந்த இடத்தில் தீ பற்றியதால் தற்போது அதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், தீயை அணைத்த பின்னரே விண் கல்லை தாம் தேடவுள்ளதாகவும் பெரு நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

தனது மெய்ப் பாதுகாவற் படைப் பெண்களை துஷ்பிரயோகம் செய்த கடாபி


லிபிய ஜனாதிபதி கடாபி தனது மெய்ப்பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கடாபிக்கு விசேட பயிற்சி பெற்ற கன்னிப் பெண்களைக் கொண்ட படையொன்று பாதுகாப்பு அளித்து வந்தது

தற்போது கடாபி தலைமறைவாகியுள்ள நிலையில் அப்படையைச் சேர்ந்த பெண்கள் சிலர் தங்களது வாழ்க்கை தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

கடாபி மற்றும் அவரது அரசாங்கம் தங்களை வற்புறுத்தி படைக்குச் சேர்த்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கடாபி தங்களை முதலில் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகவும் பின்னர் அவரது மகன்களில் ஒருவருக்கு அனுப்பியதாகவும் பின்னர் மற்றையவர்களுக்கு அனுப்பியதாகவும் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களை சடப்பொருட்களைப் போல உபயோகப்படுத்தியதாகவும் தங்கள் தேவை முடிந்தவுடன் வீசி எறிந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தாங்கள் கடாபியை தந்தை போல நினைத்ததாகவும் அவர் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடாபிக்கு 1970 ஆம் ஆண்டு முதல் விசேட பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள் மெய்ப்பாதுகாவலர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

இவர்கள் 'அமெசொனியன் கார்ட்ஸ்' என அழைக்கப்படுகின்றனர்.

விசேட பயிற்சியளிக்கப்பட்ட இப்பெண்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே படையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இவ் விடயம் தொடர்பான ஆதாரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன.

இவை சர்வதேச நீதிமன்றத்தில் கடாபி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பெண்கள் மீதான வல்லுறவை கடாபி போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Sunday, 28 August 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் ருத்ரகுமாரனின் வரலாற்று சிறப்பு மிக்க உரை!

அனைவருக்கும் வணக்கம்! தமிழீழ விடுதலை போராட்டத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் கேட்டு புரிந்து கொள்ள வேண்டிய ஒரு பேச்சு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் அவர்களின் உணர்ச்சி மிகுந்த பேச்சு சகல நெஞ்சங்களையும் பெட்னா அரங்கில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்பியுள்ளது
தமிழீழத்தை நேசிக்கும் எந்த ஒரு தமிழனும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு என்றும் துணை நிற்பான்! பிரதமரின் உரை உங்கள் கண்களை திறக்கட்டும்! நாடு கடந்த அரசு, உலக போராட்டங்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாக, இதுவரை இல்லாத வடிவில், உலக தமிழரை இணைத்து, தமிழீழ விடுதலை புலிகளின் , தமிழீழ தேசியத்தலைவரின் பாதையில் இன்னொரு படி!
இது உலக தமிழருக்கு எல்லாம் குரல் கொடுக்க பிறக்கபோகும் தமிழீழம் எங்கு தமிழனுக்கு அநீதி நிகழ்ந்தாலும் தட்டி கேட்கும் என்பதற்கு சான்றாக நாடு கடந்த தமிழீழ அரசு சிங்கள படைகள் தமிழக மீனவர்களை சுட்ட பொது உலக அரங்கு எங்கும் அதை கொண்டு சென்றது என பிரதமர் கூறியபோது எங்கள் மனங்கள் எவ்வளவு திறக்க வேண்டும் என புரிந்து கொண்டேன்!
தமிழீழம் உலகதமிழர்களின் ஒற்றைக் கனவு!

புலிகளின் அமைப்புக்களை தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை!- மெளனம் காக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பியாவில் இயங்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை பதில் வழங்கவில்லை.
இதனை இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் வெளிநாடுகளில் முன்னணி அமைப்பாக செயற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தமது கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் பதிலளிக்கும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்படும் அதேநேரம் அதன் கிளை அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும் என்பதே இலங்கையின் கோரிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர். எனினும் முன்னணி அமைப்புகளாக அவை, வெளிநாடுகளில் செயற்பட்டு வருகின்றன.
தமிழர் புனர்வாழ்வு கழகம், தமிழ் இணைப்புக்குழு மற்றும் தமிழ் இளைஞர் குழு போன்றவற்றையே தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.