| பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக இன்று (30-08-2011) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றின மக்களுமாக பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டிருந்ததை காண முடிந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தமது இளமை வாழ்வை கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் கழித்த பின்னரும், அவர்களுக்கு கொஞ்சமும் மனிதனேயமற்ற முறையில் தூக்குத்தண்டனைக்கு உட்படுத்துமாறு வழங்கப்பட்ட நீதியற்ற தீர்ப்பினை எதிர்த்து, உலகெங்கும் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் போராட்டங்களின் வரிசையில் லண்டனிலும் இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தத்து. இப் போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “இந்திய அரசே நீதியற்ற தீர்ப்பை மாற்று” “தூக்குத் தண்டனையை ரத்துச் செய்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்ககமிட்டனர். அத்தோடு கைகளிலே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உருவப்படங்கள், மற்றும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தாங்கி நீதிவேண்டி நின்றனர். இப் போராட்டத்தில் முத்தாப்பாய் தமிழகத்தில் இம் மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து வேள்வித் தீயாகிய வீரமங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப் படத்திற்கு அகவணக்கம் செலுத்தி மலர் அஞ்சலியும் செய்யப்பட்டது. இதே வேளை வீர மங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப்படங்களும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களின் கரங்களில் பரவலாகக் காணமுடிந்தது. இப் போராட்டத்தின் போது தற்போது தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் மூவரில் ஒருவரான சாந்தனின் சகோதரி அவர்களும், தமிழ் சொலிடாரிற்ரி அமைப்பின் பிரதிநிதி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தயாபரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ம.தி.மு.க கட்சி சார்பில் இளங்கோ, ஆகியோர் உரையாற்றினர். இப் போராட்டத்தின் போது தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யக் கோரும் மனு ஒன்று இந்திய தூதரக அதிகாரியிடம் முருகனின் சகோதரியினால் கையளிக்கப்பட்டது. இன்று மாலை 3:00 மணிக்கு ஆரம்பமான இப் போராட்டமானது மாலை 7::00 மணியளவில் தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் கோசத்துடன் நிறைவு பெற்றது. இப் போராட்டம் லண்டனின் மத்திய பகுதியில் மாலை நேரத்தில் நடைபெற்றதினால் அதிகளவான வேற்றின மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() ![]() ![]() |
Wednesday, 31 August 2011
மூவரின் விடுதலை வேண்டி பிரித்தானியாவில் இந்தியத் தூதரகம் முன் நடைபெற்ற போராட்டம். (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment