Tuesday, 30 August 2011

லிபியாவில் கடாபியின் வீழ்ச்சி - மௌனம் காக்கிறார் மகிந்த


லிபியாவின் தலைநகர் திரிபொலி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், புரட்சிப்படையினர் அமைத்துள்ள இடைக்கால தேசிய சபை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.

சிறிலங்கா அரசுக்கு நெருங்கிய நட்பு நாடாக லிபியா இருந்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், லிபிய அதிபராக இருந்த கேணல் கடாபிக்கும் இடையில் மிகநெருங்கிய நட்புறவும் இருந்து வந்தது.

லிபியாவுக்காக குரல் கொடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கம் அங்கு புரட்சிப்படையினர் கை ஓங்கத் தொடங்கியதும் அடக்கி வாசிக்கத் தொடங்கியிருந்தது.

திரிபொலியின் வீழ்ச்சியடைந்து பல நாட்களாகியுள்ள போதும் சிறிலங்கா அரசாங்கம் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமாக உள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா அரசஅதிகாரி ஒருவரிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியதற்கு, தாம் நிலைமைகள அவதமானித்து வருவதாக பதிலளித்துள்ளார்.

லிபியாவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை தேசிய சபையை இன்னமும் ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியுள்ள அந்த அதிகாரி, சிறிலங்காவின் முடிவு பின்னரே அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை லிபியாவில் கேணல் கடாபியின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட ரீதியாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments: