![]() |
| நயன்தாரா, பிரபுதேவா திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்தனர். பொது விழாக்களில் கை கோர்த்து பங்கேற்றனர். நயன்தாராவை மணப்பதற்காக பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் இரு வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என் எதிர்பார்க்கப்பட்டது. மும்பையில் அல்லது திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. நடிகர், நடிகைகள், நண்பர்கள், விருந்தினர்களை அழைத்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது யாரையும் அழைக்காமல் ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இத்திருமணத்தில் இருவரின் பெற்றோர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து வேள்வி வளர்த்து இந்த திருமணம் நடந்தது என்கின்றனர். ரம்லத்துக்கு பிறந்த மகன்கள் மீது பிரபுதேவா இன்னும் பிரியமுடன் இருக்கிறார். அடிக்கடி அவர்களுடன் போனில் பேசுகிறார். விவாகரத்தான போது மகன்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள சொத்து மற்றும் வீடுகளை எழுதி கொடுத்துள்ளார். நயன்தாராவுடனான திருமணத்தை அழைப்பிதழ்கள் அச்சிட்டு ஆடம்பரமாக நடத்தினால் மகன்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியதால் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளார்களாம். திருமணத்தை மும்பை ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் இந்த திருமணத்தை உறுதி செய்ய முடியவில்லை. பிரபுதேவாவுக்கு நெருக்கமானவரிடம் இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் திருமணம் நடந்ததாக மும்பையில் வதந்தி பரவி உள்ளது. அதில் உண்மை இல்லை. அடுத்த மாதம்தான் அவர்கள் திருமணம் நடக்கும் என்றார். |
Wednesday, 31 August 2011
மும்பையில் நடந்ததாக பரபரப்பு: நயன்தாரா-பிரபுதேவா ரகசிய திருமணம்?
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment