Thursday, 30 June 2011

புதிய வசதிகளுடன் கூடிய அப்பிள் ஐபோன் 5 விரைவில் அறிமுகம்

அப்பிள் தனது ஐபோன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐபோன் 5வினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள், செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது. அதனைப் போலவே இம்முறையும் ஐபோன் 5 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.
ஐபோன் 5 ஆனது தனது கடைசி வெளியீடான ஐபோன் 4 வை விட வேகமானதும், ஐபேட் 2 கணனியில் உபயோகிக்கப்பட்டதுமான ஏ 5 புரவுசரைக் கொண்டிருக்குமெனவும் 8 மெகா பிக்ஸல் கெமராவைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐகிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் ஐபோன் 4னை ஒத்ததாகவும் அதனை விட பெரிய தெளிவான திரையை கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு ஐபோன் 5 என பெயரிடாமல் ஐபோன் 4ஜி அல்லது 4 எஸ் எனப் பெயரிடலாம் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அப்பிள் தனது ஐபோன் 4வை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்த போது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதேவேளை அப்பிள் மத்திய தர சந்தைகளை கருத்திற் கொண்டு குறைந்த விலையிலான ஐபோனையும் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குரல்களை மாற்றம் செய்யும் மென்பொருள்

ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போலவும், ஒரு பெண் பேசும் குரலை நேரடியாக ஆண் பேசும் குரலாகவும் மாற்றம் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும். ஆனால் கைத்தொலைபேசிகளில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன. ஆனால் கணணியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கி நம் கணணியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும்.
உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்து விட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man, Tiny Folks, Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் Tiny Folks என்பது கேலிசித்திர கதாபாத்திரம் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் அரட்டையில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம்.
உண்மையிலே அவர் இது போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக் கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
தரவிறக்க சுட்டி

நரைமுடிக்கு தீர்வு காண புதிய சிகிச்சை அறிமுகம்

நரைமுடி என்பது பலரது தலையாய பிரச்சனை. எளிய தீர்வாக கறிவேப்பிலை, மருதாணி போன்வற்றை கொண்டு கைவைத்தியம் செய்து வருவது என்பது பழைய கால பழக்கமாகி விட்டது.
தற்போது பியூட்டி பார்லர்களுக்கு படையெடுத்து பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வருகின்றனர். ஆனால் முழு பலன் கிடைக்காமல் புலம்புவது தான் மிச்சம்.
வயது வித்தியாசமின்றி சிறியவர், பெரியவர் என அனைவரும் இப்பிரச்னையால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. பரம்பரை, உணவுப்பழக்கம் எல்லாம் காரணமாக கூறப்பட்டாலும் தீர்வு கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் வின்ட் அல்லது டபிள்யூ.என்.டி என்ற பிரத்யேக புரோட்டீன் குறைபாடு காரணமாகவே நரைமுடி ஏற்படுவது தெரியவந்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நியூயார்க் பல்கலைக்கழக லங்கோன் மருத்துவ மையம் சார்பில் இந்த ஆய்வு நடந்தது. இதுகுறித்து வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு: முடிகளின் நிறமாறுதலுக்கு காரணமான டபிள்யூ.என்.டி என்ற புரதம் தான் நரைமுடி பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், பயன்படுத்தும் ஷாம்புகள், எண்ணெய், லோஷன்களால் இந்த டபிள்யூ.என்.டி என்ற புரதத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் போது நரைமுடி தோன்றுகிறது.
ஆரம்ப கட்டத்தில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையால் இந்த பாதிப்பை முற்றிலும் குணப்படுத்த முடியும். கவனிக்காமல் விட்டால் நரைமுடி அதிகரிக்கும். இதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் ஸ்டெம் அல்லது தாய் செல்களின் செயல்பாடுகளை தூண்டி டபிள்யூ.என்.டி புரதத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
இது முடிகளின் இயல்பான கருமை நிறத்துக்கு வகை செய்யும். இந்த குறைபாட்டை சீர்செய்யும் போது முடி உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு வளர்ச்சியை அதிகரிக்கும். இத்தகைய முறையில் இயற்கையான பாதுகாப்பும் ஆரோக்கியமும் உறுதி. இதனால் எந்த பக்க விளைவுகளோ பாதிப்போ இல்லை.

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்வதற்கு

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன.
Smart Driver Updater என்ற மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக் கொள்ள முடியும்.
மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பக் அப் மீண்டும் கணணியில் நிறுவிக் கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணணியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும். தற்போது விடுபட்ட ட்ரைவர்களை பட்டியலிடும்.
பின் வேண்டிய ட்ரைவர்களை இணையத்தின் உதவியுடன் உங்கள் கணணியில் பதிவேற்றம் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் ட்ரைவர்களை பக் அப் செய்து கொள்ளவும் முடியும்.
இந்த மென்பொருள் மூலம் பக் அப் செய்து மீண்டும் ட்ரைவர்களை எளிமையாக நிறுவிக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
தரவிறக்க சுட்டி

வாரம் ஒருமுறை எண்ணெய் மசாஜ் குளியல் முடி உதிர்வதை தடுக்கும்

தன்னை உயர்த்திக் காட்ட விரும்பும் மனப்பான்மை

குறிப்பு : ஜெர்மன் மொழிக் கட்டுரை ஒன்றிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

histrionic = நாடகம், நடிப்பு, மாறுவேடம்
தன்னை உயர்த்திக் காட்ட விரும்பும் மனப்பான்மை, நாடகமாடும் பழக்கம்.

Histrionic எனும் மன ஒழுங்கின்மைக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். மற்றவர்களுடைய கவனத்தைப் பெற எப்போதும் விரும்புவார்கள். 'தான் செய்வதுதான் சரி' என மற்றவர்கள் சொல்வதை விரும்புவார்கள்.

மற்றவர்களுடன் உரையாடும்போது உண்மைக்கு மாறான தகவல்களை அளிப்பார்கள். திடீர் திடீரென உணர்வுகளில் மாற்றம் ஏற்படும். மன அழுத்தத்தை நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாமல் தவிப்பார்கள். இதனால் தாங்கள் விரும்புவதை உடனடியாகப் பெற கடினமாக முயல்வார்கள். சிறிய விஷயங்கள் கூட அவர்களுடைய உணர்வுகளில் பெறும் மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அதிர்ச்சியான உணர்வை உடனடியாகப் பெறுவார்கள். மற்றவர்களுடைய விஷயங்களைக் குறித்து அதிகமாக சிந்திப்பார்கள். மற்றவர்களுடைய விஷயங்களில் அதிகமாகத் தலையிடவும் முயல்வார்கள்.

இந்த மன அழுத்த நோயை பரிசோத்தித்துப் பார்க்கும் முறை Hypochondrie-Hysterie-Inventar (HHI) என்று அழைக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்கள் மற்றவர்களிடம் தங்களை எப்படிப்பட்டவர்கள் என்று காட்ட விரும்புவதை அறிய முடியும். வேறொருவருடைய கட்டுப்பாட்டில் இல்லாதபோது எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும். மற்றவர்களுடனான சிநேகப்பான்மையான தொடர்பாடல், மன அழுத்தம் உள்ள சமயங்களில் தன் குற்றத்தை மறுத்து வாதாடுவது, கோபம் அல்லது ஆளுமை உணர்வின் தாக்கம் அதிகரிக்கும்போது தன்னைக் குறித்து பரிதாபிப்பது போன்றவற்றைக் கண்டறிய முடியும்.

இந்த நோயில் சில வகைகள் உண்டு

ICD மற்றும் DSM:

பின்வரும் கூற்றுகளில் குறைந்தது நான்கு தன்மைகள் பொருந்தினால் ICD எனவகைப்படுத்தப்படும்.

1. தன்னைப் பற்றிய நாடகப்பாணியிலான நினைப்பு மற்றும் உணர்வுகளை மிகைப்படுத்தி வெளிப்படுத்துவது.
2. நிஜமான சம்பவங்களை மிகைப்படுத்துவது. மற்றவர்களால் அல்லது சூழ்நிலைகளால் இலகுவாக பாதிக்கப்படுவது..
3. அதீத அதிர்ச்சி உணர்வு.
4. தன்னை முன்னிலைப்படுத்த விரும்பி, சுவாரசியமான சூழ்நிலைமைகளை நாடுவது மற்றும் தன்னை முதன்மைப்படுத்தி மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பது.
5. பொருத்தமற்ற வெளித்தோற்றத்தின் மூலம் அல்லது செயல்களின் ஊடாக மற்றவர்களை பொருத்தமற்ற செயலைச் செய்யத் தூண்டுவது.
6. அளவுக்கு அதிகமாக வேலைகளை (எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பது) செய்வதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் சுறுசுறுப்பான நபராக தன்னைக் காட்டிக் கொள்வது.
சுயநலமான சிந்தனை, தன் விருப்பத்தை நிறைவேற்ற தீவிர ஆசை, தொடர்ச்சியாக மற்றவர்களுடைய அங்கீகாரத்தை நாடுவது, மற்றவர்களுடைய தேவைகளைக் காணத் தவறுவது, எளிதில் புண்படும் மனம், சம்பங்களை மிகைப்படுத்தி வர்ணிப்பது.

DSM-IV:

மிகைப்படுத்திய உணர்வுகள் கொண்டிருப்பது மற்றும் தொடர்ச்சியாக மற்றவர்களுடைய கவனத்தைப் பெறத் துடிப்பது இவ்வகையைச் சாரும்.

1. மற்றவர்களுடைய கவனத்தில் தான் முதல் இடத்தில் இல்லை என்பதை உணரும் சூழ்நிலைமைகளில் தர்மசங்கடமாக உணருவார்கள்.
2. Interaction (செயலெதிர்ச்செயல்) மூலம் மற்றவர்களை இடறச்செய்வது, பாலியல் ஆசை காட்டி அல்லது மற்றவர்களை வேண்டுமென்றே வம்புக்கு வரச்செய்வது.
3. திடீர் திடீரென மாறும் மேலோட்டமான உணர்வுகளை வெளிப்படுத்துதல்.
4. மற்றவர்களுடைய கவனத்தைப் பெறுவதற்காக தவறாமல் தன் உடல் தோற்றத்தில் கவனம் செலுத்துதல்.
5. Impressionism: உரையாடலில் கருத்துக்களை விட சொற்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது. உரையாடலில் தரம் இருக்காது.
6. சூழல் மற்றும் சக மனிதர்களால் இவர்களது உணர்வுகள் எளிதில் பாதிக்கப்படும்
7. மற்றவர்களுடனான உறவு மேலோட்டமானதாக இருந்தாலும் அது பலமான அல்லது நட்பு எனக் கருதுவது.

இந்த மனஅழுத்த நோயை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

போலி பெண் பொலிஸ் கைது: விசாரணையில் 10 பொலிசாரிடம் தொடர்பு இருப்பதாக தகவல்

காளஹஸ்தி கோவிலில் குடும்பத்தாருக்கு சிறப்பு பூஜை செய்தார் கருணாநிதி மகள் செல்வி

தற்போது தடுப்புக்காவலில் உள்ள புலிகளைச் சுட்டு போர்குற்ற வீடியோ தயாரிப்பு ?



இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்து அந்த காணொளிகளை தமிழர்களுக்கு போர்க்குற்ற ஆதாரமாகக் கொடுக்க இராணுவம் முனைப்புக்காட்டி வருகிறது. தம்மிடம் உள்ள போராளிகள் சிலரை காட்டிற்குள் கூட்டிச்சென்று சுட்டுக்கொலைசெய்து, அதனை மோபைல் போனில் எடுத்து பின்னர் போர் குற்ற காணொளி எனக்கூறி அதனை பெருந்தொகைப் பணத்துக்கு விற்க இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிலர் முயற்சிசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. இவ்வாறான வீடியோக்களை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வைத்து பல லட்சம் ரூபாய்களுக்கு இலங்கை இராணுவத்தினர் விலைபேசி வருகின்றனர்.

வீடியோவாக இருக்கலாம், இல்லையேல் புகைப்படமாக இருந்தாலும் அதில் பதிவாகியுள்ள மீட்டா டாக் எனப்படும் இரகசியக் குறியீடுகள் மூலம் படம் அல்லது வீடியோ எடுக்கப்பட்ட தேதியை நன்கு துல்லியமாக அறிய முடியும். இதனைக் கொண்டே சனல் 4 தொலைக்காட்சியானது இலங்கையில் நடைபெற்ற கொலைகளையும் அதன் தேதியின் அடிப்படையில் துல்லியமாக பகுப்பாய்வுசெய்து கண்டு பிடித்தது. பின்னர் ஐ.நா வும் இதனை உண்மையான காணொளி என தனது பகுப்பாய்வு மூலம் செய்திவெளியிட்டது. ஆனால் தற்போது தயாராகியிருக்கும் வீடியோக்கள் உண்மையானவை என்றாலும், அவை மே 2009ம் ஆண்டு நடைபெறவில்லை என்றும் அதற்கு பின்னரே நடைபெற்றது என்றும் தற்போது செய்திகள் கசிந்துள்ளது.

மே 2009ம் ஆண்டு நடந்த படுகொலைகளை உலகிற்கு காட்டியதால், சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பாரியளவில் பிரயோகிக்கப்பட்டு வரும் இந் நிலையில் கூட இலங்கை இராணுவம் மிலேச்சத்தனமான காரியங்களில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது என விடையம் அறிந்த வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யூரோ நாணயத்தை கைவிடும் நோக்கில் ஜேர்மனி

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனி யூரோ நாணயத்தை கைவிட்டு பழைய நாணயமான டச்மார்க்கிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக யூரோ நாணயத்தை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஜேர்மனி நாட்டின் மத்திய வங்கியான பண்டெஸ் வங்கி "டச்மார்க்" சின்னம் பதித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து டச்மார்க் சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும் அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மன் நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் டச்மார்க் நாணயம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவின் டொலருக்குப் பிறகு உலகளவில் டச்மார்க் நாணயத்திற்கு நல்ல பெயர் இருந்தது. தற்போது அந்நாட்டு மக்கள் டச்மார்க் நாணயத்தின் தனித்துவத்தை இழக்காமல் மீண்டும் அதே நாணயம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விட்டு வந்தனர்.

மேலும் வர்த்தக ரீதியில் டொலருக்கு அடுத்ததாக நல்ல முதலீட்டை டச்மார்க் நாணயம் ஈர்த்து வந்தது. யூரோவைப் பெற்றிருக்கும் கிரீஸ் நாடு தற்போது திண்டாடுகிறது. இந்நிலையில் யூரோ நாணயத்தின் மதிப்பை சர்வதேச அளவில் நிலை நிறுத்த வேண்டுமானால் கிரீஸ் நாட்டை திவாலில் இருந்து ஐரோப்பிய நாடுகள் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் யூரோ நாணயத்தின் மதிப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி உள்ளதால் ஜேர்மன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் டச்மார்க் நாணயத்திற்கு மாற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இது தொடார்பாக ஜேர்மன் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: யூரோ நாணயத்திற்கு எதிர்காலம் இல்லை என்று 71 சதவீதம் பேரும், அந்த நாணயத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று 19 சதவீதம் பேரும், கிரீஸ் நாட்டை காப்பாற்றும் ஐரோப்பிய நாடுகளின் எமர்ஜென்சி நடவடிக்கை வெற்றி அளிக்காது என்று 68 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்றொரு ஆய்வில் யூரோ நாணயத்திலிருந்து கிரீஸ் நாட்டை வெளியேற்ற வேண்டும் என்று ஜேர்மனி நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

யூரோ நாணயம்
1989 இல் டெலாரஸ் அறிக்கை வெளியானது. இதில் ஐரோப்பிய நாடுகளிடையே
நிதி ஒருங்கிணைப்பு பற்றி இடம்பெற்றிருந்தது.

1991 இல் மஸ்ரிச் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1994 இல் ஐரோப்பிய நிதி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1995 இல் புதிய நாணயத்திற்கான பெயர் (யூரோ) நிர்ணயிக்கப்பட்டது.

1998 இல் ஐரோப்பிய மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. இது ஜேர்மனின்
பிராங்பேட் நகரில் அமைக்கப்பட்டது.

1999 இல் யூரோ நாணயம் அறிமுகமானது.

2002 இல் யூரோ நாணயம் புழக்கத்திற்கு வந்தது.

2003 இல் அங்கத்துவ நாடுகளின் பழைய நாணயங்கள் மீள பெறப்பட்டது.

யூரோ நாணயம் 11 நாடுகளில் புழக்கத்திலுள்ளது.
அவுஸ்திரியா
பின்லாந்து
பெல்ஜியம்
பிரான்ஸ்
ஜேர்மனி
அயர்லாந்து
இத்தாலி
லக்சம்பேக்
நெதர்லாந்து
போர்த்துக்கல்
ஸ்பெயின்

தானியங்கி கதவுக்குள் சிக்கிக் கொண்ட பெண்(படங்கள் இணைப்பு)

இதனால் அப்பெண்ணின் தலை கதவுகளுக்குள் சிக்கிக் கொண்டது. பதறிப்போன சக பயணிகள் எழுப்பிய கூக்குரலில் டிரைவர் பேருந்தை நிறுத்தி கதவுகளை மீண்டும் திறந்தார்.







சரியாக கவனிக்கவில்லை என்று கூறிய டிரைவர் பேருந்தை மீண்டும் செலுத்த தொடங்கினார்.

காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் டிரைவரின் கவனக்குறைவென்று எண்ணி அப்பெண் பயணியும் தன் வழியே சென்றார்.

கட்சி அமைப்புகளை மாற்றியமைக்க தி.மு.க., முடிவு

சென்னை:"சட்டசபைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சி அமைப்புகளை மாற்றி அமைப்பது' என, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கட்சி பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. ஆட்சியில் இருந்தபோது, இலவச திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தியும், வெற்றி பெற முடியாதது, தி.மு.க., தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தபோது, பெரும்பாலான மாவட்டச் செயலர்கள், மக்களிடையே மட்டுமின்றி, கட்சித் தொண்டர்களிடமும் வெறுப்பை சம்பாதித்திருப்பது தெரிந்தது.குறுநில மன்னர்கள்போல் செயல்பட்ட, மாவட்டச் செயலர்கள் தங்களின் ஆதரவாளர்களைத் தவிர மற்றவர்களை, வளர விடாமல் தடுக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

தி.மு.க.,வில் அமைச்சராக இருப்பவரை விட, மாவட்டச் செயலராக இருப்பவருக்கு கட்சியில் செல்வாக்கு அதிகம்.அவருக்கு அடுத்தபடியாக நகரச் செயலர், ஒன்றியச் செயலர் போன்றோருக்கு மதிப்பு அதிகம். இதை பயன்படுத்தி, பலர் சட்ட விரோதமாக சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். இப்பதவிகளுக்கு, குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் வர முடியாது என்ற நிலையும் உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாவட்டச் செயலர்களின் அதிகாரங்களை பரவலாக்கவும், தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை நீக்கவும், கட்சி அமைப்பை மாற்றி அமைக்க தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.அதற்கு முன்பாக, கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க., தலைமைக்கழகம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:குவிந்திடும் கட்சிப் பணிகளை இனிதே நிறைவேற்ற, கட்சி சட்ட திட்டங்களில் அமைப்பு ரீதியான மாற்றங்களை, பொதுக்குழு அனுமதி பெற்று செய்திட, தலைமைக்கழகம் சார்பில், சில சட்ட திட்டங்களை, திருத்த வேண்டியுள்ளது.இது தொடர்பான கருத்துரு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருத்து என்னவென்றால், தற்போதுள்ள மாவட்டக் கழகத்திற்கு பதிலாக, ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும், லோக்சபா தொகுதி குழுக்கள் அமைக்கப்படும். அவற்றின் கீழ் சட்டசபைத் தொகுதி குழுக்கள் பணியாற்றும். இது தொடர்பான கருத்துக்களை, பொதுக்குழு உறுப்பினர்கள் வரும் 15ம் தேதிக்குள், கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:மாவட்டச் செயலர்களின் அதிகாரத்தை குறைப்பதற்காக, கட்சித் தலைமை இம்முடிவை எடுத்துள்ளது. தற்போது, கட்சியில், 35 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். லோக்சபா தொகுதி குழுக்கள் அறிவிக்கும்போது, தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலர் வீதம், கூடுதலாக நான்கு மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படுவர்.நகரச் செயலர், ஒன்றியச் செயலர் பதவி அப்படியே நீடிக்கும் எனத் தெரிகிறது. மாவட்ட அமைப்பு மட்டும் மாற்றப்பட்டு, லோக்சபா தொகுதி குழு அமைக்கப்படும். அவர்களுக்கு கீழ், சட்டசபை தொகுதி குழுக்கள் பணியாற்றும். இதன் மூலம் புதிதாக பலர் பதவிக்கு வர வாய்ப்புள்ளது.இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

காஸ் சிலிண்டர் விலையில் ரூ.15 குறைப்பு: "வாட்' வரியை நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை:சமையல் காஸ் மீது, தமிழக அரசு விதிக்கும், 4 சதவீத மதிப்புக் கூட்டு வரியை முற்றிலும் நீக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலையில், 14 ரூபாய், 73 காசு குறையும். இனி வருங்காலங்களிலும் சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமையல் காஸ் விலையை குறைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் மற்றும் மூத்த அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன்பின், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை, மத்திய அரசால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதால், பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல், டீசலுக்கான விலையை, லிட்டருக்கு, 3 ரூபாயும், சமையல் காஸ் விலையை, சிலிண்டர் ஒன்றுக்கு, 50 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை, லிட்டருக்கு, 2 ரூபாயும் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்தது.பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட, அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு, அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும்.இதிலும், சமையல் காஸ் விலை, சிலிண்டருக்கு, 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால், தாய்மார்கள் விரக்தியில் உறைந்து போயுள்ளனர். உலகளவில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகக் கூறி, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு, மாநில அரசுகள், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டுமென அறிவுரை வழங்குவது வேடிக்கையானது.

நம்நாட்டு தேவைக்கான பெட்ரோலியப் பொருட்கள் அனைத்துமே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலம் மட்டும் தயாரிக்கப்படுவது அல்ல. உள்நாட்டில் பெறப்படும் கச்சா எண்ணெய் மூலமும் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் லாப நோக்கு, நிர்வாகத் திறமை, நிர்வாகச் செலவுகளும் பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.இவற்றை கருத்தில் கொள்ளாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையை மட்டும் சுட்டிக்காட்டி மத்திய அரசு தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. எனவே தான், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்ததோடு, இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டுமென கேட்டேன்.

முந்தைய தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழகத்தில், கடன் சுமை, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துவிட்டது. இதுதவிர, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் உட்பட, பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.ஒப்பந்ததாரர்கள், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கிய விவசாயிகளுக்கு எல்லாம், பல மாதங்களாக நிலுவைத் தொகையை வழங்காமல், முந்தைய அரசு விட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு, பெட்ரோலியப் பெருட்களின் விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் காஸ் விலை உயர்வில் இருந்து அவர்களைப் பாதுகாக்க, தமிழக அரசால் வழங்கக் கூடிய நிவாரணம் அனைத்தையும் வழங்க முடிவு செய்துள்ளேன்.அதனடிப்படையில், மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டு, இனிமேல் குறைப்பதற்கு ஏதுமில்லை என்ற அளவில், சமையல் காஸ் விலையை குறைக்க முடிவு எடுத்துள்ளேன். அதன்படி, சமையல் காஸ் மீது தற்போது விதிக்கப்படும், 4 சதவீத மதிப்புக் கூட்டு வரியை, வரும் ஜூலை 1ம் தேதி முதல், அறவே நீக்க உத்தரவிட்டுள்ளேன்.
இதையடுத்து, தமிழகத்தில் தற்போது விற்கப்படும் ஒரு சிலிண்டர் காஸ் விலை, 404 ரூபாய், 40 பைசா என்ற அளவில் இருந்து, 389 ரூபாய், 67 பைசா என்ற அளவுக்கு குறையும். அதாவது, ஒரு சிலிண்டர் விலை, 14 ரூபாய், 73 காசு அளவுக்கு குறையும். இனி வருங்காலங்களிலும், சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது.சமீபத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட, 50 ரூபாய் விலை உயர்வுக்கு தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரியின்படி, மாநில அரசுக்கு, ஆண்டுக்கு, 16 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், ஏற்கனவே சமையல் காஸ் மீதான மதிப்புக் கூட்டு வரி மூலம் ஆண்டுக்கு கிடைத்து வந்த, 104 கோடி ரூபாய் வருவாயையும் சேர்த்து, மொத்தம், 120 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரிலாவை தத்தெடுத்து தன் குடும்ப உறுப்பினராக வளர்க்கும் தம்பதியினர்

பாலியல் தொழிலுக்கு பெண்களை விநியோகிக்கிறது இலங்கை - அமெரிக்க அறிக்கை

இலங்கையில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களைக் கடத்துவதில் இலங்கையும் ஒரு மூலமாக இருப்பதாக அமெரிக்காவின் 2011 ஆம் ஆம் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. மனித கடத்தல்கள் குறித்துக் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளில் பட்டியலில் இலங்கையை வைத்திருந்த அமெரிக்கா, இப்போது அதை இரண்டாம் மட்டத்தில் சேர்த்துள்ளது. அதாவது கடத்தல்கள் இலங்கையில் நடக்கின்றன, ஆனால் இதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்கள் நடமாடுவதற்குக் கட்டுப்பாடு, கடவுச்சீட்டை வாங்கி வைத்திருத்தல், அச்சுறுத்தல், உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மூலம் கட்டாய வேலை வாங்கப்படுகிறார்கள் என்று அவ்வறிக்கை மேலும் கூறியுள்ளது. வீட்டுப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு உடல்ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்படுகின்றன. 11 வீதத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர். 60 வீதமானவர்களுக்கு சம்பளங்கள் வழங்கப்படுவதில்லை, 60 வீதமானவர்கள் கடவுச்சீட்டுகளைக் கொடுத்துவிட்டு இருக்கிறார்கள், 80 வீதமானவர்கள் நடமாடக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளார்கள்.

வேறு நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்ய அனுப்பப்படும் பெண்களில் பலரும் உண்மையில் பாலியல் தொழிலைச் செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் வேலை கொடுக்கப்படும் என அழைத்துச் செல்லப்படும் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதையும், இலங்கைக் கடற்கரைகளில் சிறுமிகள் தவிர சிறுவர்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதையும் அவ்வறிக்கை குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

இலங்கைப் பிரச்சினைகளில் அவசரம் காட்ட முடியாது! இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு

இலங்கைப் பிரச்சினைகளில் அவசரம் காட்ட முடியாதெனவும் மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடன்தான் எதையும் அணுக வேண்டும் எனவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இன்று அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான்- சீனா- பங்களாதேஷ் ஆகிய அண்டை நாடுகளுடனும் அவ்வாறான போக்கினை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர்- ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும்- சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய உளவுத்துறையே என்னையும், சரத் பொன்சேகாவையும் எதிரிகளாக்கியது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இந்திய உளவுத்துறையின் சதி காரணமாகவே தானும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் எதிரிகளாக நோ்ந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பச்சாதாபப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே இராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான  முன்னாள்  இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடாத்தி விட்டது. அதன் பின்பு ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதம அலுவலர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய முன்வந்த போது அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதனை விடப் பெரும் தவறாகும்.
சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எவ்வளவோ வற்புறுத்தியும் இந்தியாவின் அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.
அவ்வாறின்றி அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருந்தால், காலப்போக்கில் சரத் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் சரத் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் இராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசாங்கத்தைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக மட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.
அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
இராணுவத்தின் அறுபதாவது ஆண்டு  நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 17ம் திகதி தனது பிறந்த நாளுடன் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார். அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.
முரட்டுத்தனமானதும், தன்னிச்சையானதுமான போக்குகளைக் கொண்டிருந்த போதும், சரத் பொன்சேகாவின் ஆற்றல் மற்றும் அறிவு என்பவற்றுக்கு அருகில் நெருங்கவும் முடியாத நிலையிலேயே ஏனைய அதிகாரிகள் இருக்கின்றனர். வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்றவாறு கடந்த கால சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலையுடன் அசைபோட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதி இந்தளவுக்கு இறங்கி வரக் காரணம் அரசியல்வாதிகள் சிலர் சரத் பொன்சேகா விடயத்தில் மேற்கொண்ட தலையீடுகள்தான் என்றவாறாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் கோரியுள்ளது.
இல்லையேல் சர்வதேச அழுத்தங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் இலங்கை முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கை அடங்கிய அறிக்கை, நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
இவ்வாறான விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால், இலங்கை தமக்கு எதிராக வேறு நடவடிக்கைகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகள் முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் போது இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான காணொளிக் காட்சிகளை அடுத்தே அமெரிக்கா, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

விளைநிலத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் (படங்கள் இணைப்பு)


ஜப்பானை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அங்குள்ள விவசாயிகளால் ஒவ்வொரு ஆண்டும் இந்த நெற்பயிர் ஓவியங்கள் விளைவிக்கப்படுகிறது. இவைகள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற அரிசியில் விளையும் நெற்பயிர்களைக்கொண்டு விளைவிக்கப்படுகிறது.











28 Jun 2011

வழக்கத்திற்கு மாறானவற்றை பாதுகாக்கும் அருங்காட்சியகம்(வீடியோ இணைப்பு)


பிலடெல்பியாவிலுள்ள Mutter அருங்காட்சியகத்தில் சோப்பினால் பலவீனப்பட்ட ஒரு பெண்ணின் தோல் மற்றும் 40 LP எடையுடைய ஒரு ஆணின் பெருங்குடல் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இப்படி வழக்கத்திற்கு மாறான நம்ப முடியாத மனித விடயங்கள் பல இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.



29 Jun 2011

ஆணி மற்றும் நாணயத்தை உண்ணும் வினோத மனிதன் (வீடியோ இணைப்பு)


ஆணி மற்றும் நாணயத்தை உண்ணும் வினோத மனிதன் (வீடியோ இணைப்பு)
பஞ்சாப்பை சேர்ந்த சுரிந்தர்குமார் என்பவர் ஆணி, நாணயம் மற்றும் கொண்டை ஊசி போன்றவற்றை சாப்பிட்டு வருகிறது. இவரின் உணவுப்பழக்கம் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எப்படித்தான் இப்படிப்பொருட்களை உண்டு வாழ்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

29 Jun 2011

Wednesday, 29 June 2011

2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி

மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார்.


இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.

வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை.

இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார்.

வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைப் பகைத்தமையாலேயே புலிகள் தோற்றனர்! கே.பி க்கு வந்த சுடலை ஞானம்


தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், தற்போது அரச தடுப்புக்காவலில் உள்ளவருமான கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கடந்த மே 14 ஆம் திகதி CNN -IBN சேவைக்கு வழங்கிய பேட்டியின் முக்கிய அம்சங்களின் வரிவடிவமாகும்.

இலங்கை அரசாங்கத்துடனான யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியடைந்தமைக்கான பிரதான காரணம் விடுதலைப்புலிகள் இலங்கையின் சகோதர நாடானதும், வல்லரசுமான இந்தியாவுடன் முதலில் போர் புரிந்தமையாகும் என்று கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது எமக்கு ஆதரவு அளித்துவந்த மக்களை இழந்தோம்.

35 வருடங்களுக்கும் மேற்பட்ட நீண்ட யுத்தம். இதனால் மக்கள் சலிப்படைந்தனர். போரில் பலர் இறந்தனர். மக்கள் அதிக விலை கொடுத்துவிட்டனர். இதுவும் தோல்விக்கான ஒரு காரணமாகும் என்றார். 2006 ஆம் ஆண்டு சுதந்திரம் கோரி அதாவது தமது தனிஈழக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்துலக சமூகத்திடம் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் ஒரு நாடுகூட இதனை ஏற்று ஆதரவளிக்க முன்வரவில்லை. இதிலிருந்து நான் கூறவருவது என்னவெனில் உலகம் பிரிவினைவாதத்தை விரும்பவில்லை என்றார். ஜேர்மனி, அமெரிக்கா, நோர்வே,கனடா, ஜப்பான் போன்ற பல உலகநாடுகள் இலங்கை அரசாங்கத்துடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை வலியுறுத்தின.

ஆனால் புலிகள் தமது கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அவர்களின் ஒரே இலக்கான தனிஈழம் என்ற கடுமையான போக்கை தொடர்ந்து கடைபிடித்து வந்தார்கள். 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பித்திருக்கையில், ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியன விடுதலைப்புலிகளுக்கு வழங்கும் நிதிகளை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டார்.

இதனால் உலகை எதிர்த்து எம்மால் எழுந்து நிற்கமுடியவில்லை. கே.பி.யிடம் ஐ.நா நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக கேட்கப்பட்டபோது, “அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் தவறு செய்துள்ளதாக ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் இந்த அறிக்கையைக் கொண்டு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இது மேலும் இடையூறுகளையே ஏற்படுத்தும். இந்த அறிக்கையினால் யாரும் நன்மையடையப் போவதில்லை. போர் முடிவடைந்துவிட்டது. உணவு, உடை மற்றும் அவர்களின் வாழ்க்கையை ஆரம்பிப்பதே மக்களின் தற்போதைய தேவையாகும். மக்கள் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றும்படியே கேட்கின்றனர்.

இதனையே நிறைவேற்ற வேண்டும். எனவே சர்வதேச சமூகத்திடமும், புலம்பெயர் தமிழர்களிடமும் இதனையே நான் கூறவிரும்புகிறேன். ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் குழுக்கள் மீண்டும் ஒரு யுத்தத்தை இலங்கையில் ஏற்படுத்தமுனையுமாயின், என்னை கொன்றதன் பின்னேரே அவர்களால் அதனை நடத்த முடியும் என்று கே.பி தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் தலைமைகளை காப்பாற்றுவதற்கு தாம் கப்பலை அனுப்புவதாக பல ஐரோப்பிய நாடுகள் கூறியிருந்தன.

ஆனால் அதற்கான காலம் முடிவடைந்துவிட்டது. கடந்த 35 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் எனது வாழ்க்கை செலவழிந்துவிட்டது. கடந்த 2 வருடங்களாக வீட்டுக்காவலில் உள்ளேன். இன்னும் எத்தனை வருடங்களுக்கு இவ்வாறு இருக்கப்போகின்றேன் என்று எனக்குத் தெரியாது.

எனவே எனது மிகுதி வாழ்க்கையை வன்னியில் உள்ள சிறுவர்களுடன் கழிக்க விரும்புகிறேன் என்று பாதுகாப்புச் செயலாளருடன் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் போரில் பிள்ளைகளை இழந்த, பாராமரிக்க யாருமற்ற முதியவர்களையும் பராமரிக்க விரும்புகிறேன். மற்றும் அங்கவீனமானவர்களுக்கு, முக்கியமாக அங்கவீனமான பெண்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். அவர்களது முகங்களில் சந்தோசத்தை பார்ப்பதே எனது கனவாகும் என்று கே.பி அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்
29 Jun 2011

Tuesday, 28 June 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி நடிகர், நடிகைகள் பேரணி


Photo

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி நடிகர், நடிகைகள் பேரணி[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 12:47.57 PM GMT ]
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, ராதாரவி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.
இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம்.
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம்.
இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டோம்.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு நடத்தலாம் என்று அவர் கூறினார்.

முத்தம் கொடுத்த யுவதி சீன மக்களின் ஹீரோயின் ஆகி விட்டார். (வீடியோ இணைப்பு)

குடும்பப் பிரச்சினைகளால் மனம் உடைந்து போய் இருந்த 16 வயது பையன் ஒருவர் உயரிய பாலம் ஒன்றில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வார் என்று மிரட்டிய சம்பவம் சீனாவில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றது.


எவரும் நெருங்கி வந்து விடாதபடி கத்தியை உடைமையில் வைத்துக் கொண்டு மிரட்டினார் பையன். பொலிஸார் என்ன செய்யலாம் ? என்று அறியாமல் திகைத்து நின்றனர். பொதுமக்கள் குவிந்து நின்று வேடிக்கை பார்த்தனர்.

அப்போது வந்து சேர்ந்தார் 19 வயது இளம் யுவதி ஒருவர். பையனின் காதலி என்று சொல்லிக் கொண்டார். பையன் நின்ற இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். பையனுடன் பேச்சுக்கள் நடத்தினார். திடீரென்று பையனை கட்டி அணைத்து முத்தங்கள் கொடுத்தார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று உணர்ந்து வேகமாக செயல்பட்ட பொலிஸார் பையனை அலக்காக தூக்கிச் சென்றனர். பையன் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுப்பட்டார். முத்தம் கொடுத்த யுவதியோ சீன மக்களின் ஹீரோயின் ஆகி விட்டார். சம்பவங்களுடன் கூடிய காட்சிகள் இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ளன.

Monday, 27 June 2011

பல்லி கோழி இரத்தம் குடிக்கும் சிங்கள ஆமி ..! (வீடியோ இணைப்பு)


சிங்கள இராணுவத்தினர் புலிகள் அழிந்த நிலையில் பச்சைகோழி .பல்லிகளை பச்சையாக உண்ணும் காட்சிகளை பாருங்கள் .

கோழிகளை உயிரோடு உண்டு அதன் இரத்தம் குடிக்கும் படைகள்
27 Jun 2011

தமிழினப் படுகொலைக்கு எதிராக மெரினாவில் திரண்ட மாபெரும் மனித அலை! (படங்கள் இணைப்பு)

ஐ.நாவுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமான நேற்று இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழ் மக்களால் உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடற்கரையெங்கும் எழுச்சியுடன் மெழுகுவர்த்தி ஏந்திய மக்கள் கூட்டமாகக் காட்சியளித்தது...

இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் பழ.நெடுமாறன் உரையாற்றுகையில், “இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம்பெற்றுக் கொடுக்கவே இங்கே கூடியிருக்கிறோம்.

இந்த ஒற்றுமை ஒன்றுபட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை அடைய முடியும். அதற்கு இந்நிகழ்வு ஆரம்பமாக அமையட்டும்” என்றார்.

ஈழத்திலே நடந்த தமிழினப் படுகொலைக்கு எதிராக உண்மையிலேயே மாபெரும் எழுச்சியை மெரினாவில் ஏற்படுத்திய தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் உங்களை நம்பி தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழ்மக்களின் பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவ வேண்டும்..

அவர்களை மரியாதையோடு நடாத்த வேண்டும்.. ஒரு இந்தியக் குடிமகனுக்குரிய அந்தஸ்துக்களை வழங்கும் வழிவகைகளைச் செய்ய வேண்டும்...

அத்தோடு இன்னமும் இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களிலேயே உள்ள முகாம்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வதாரங்களை மேம்படுத்துவதற்கான பொருளாதார ரீதியிலான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்...











ஆப்ரிக்காவை ஆட்சி புரிந்த மன்னர்கள் (படங்கள் இணைப்பு)

ஆப்ரிக்காவின் வரலாறு உலகின் மிக பழமையான மனித வரலாறு ஆகும். அந்த பழமையான வரலாற்றில் ஆட்சி புரிந்த மன்னர்களைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.





























பதுங்குக்குழியில் இயங்கும் சேவையகம் (படங்கள் இணைப்பு)

விக்கிலீக்ஸின் நிறுவனத்தின் அனைத்து தரவுகளும் நிச்சயமாக மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். ஏன் என்றால் விக்கிலீக்ஸ் நிறுவனம் ஸ்டாக்ஹோம "Banhof ISP" யை, ஒரு பாறை மலைக்கு கீழ் 100ft பள்ளத்தில் அமைந்துள்ளது.