Friday, 3 February 2012

சேவிங் செய்த குரங்கு


தலைவர் பாட்சாவுல ஒரு டயலாக  சொல்லுவாரு , ஞாபகம்   இருக்கா ?

         எல்லா உயிரும் தனது செயலை ஒன்று இதயத்தை ( instinct ) கேட்டு செய்கிறது , இல்லை மூளையை (learned behavior)  கேட்டு செய்கிறது.

அது இன்னாப்பா  instinct  ,learned behavior ?

learned behavior - பட்டறிவு அல்லது அனுபவ அறிவு:

         உங்க பாஸ் ஒரு மொக்க ஜோக் சொல்றாரு , மனசுக்குள்ள கடியா இருந்தாலும் , அந்த நாயால நமக்கு நிறைய காரியம் ஆக வேண்டிஉள்ளது , அதுக்காக சிரிச்சு ( சோப்பு போட்டு ) வைப்போம் ன்னு micro second குள்ள உங்க அனுபவ அறிவின் (learned behavior )துணையோடு , செம்மை ஜோக் சார் , எப்புடி உங்களால மட்டும் இப்புடின்னு சொல்றீங்களே அது தான் learned behavior.




instinct - உள்ளுணர்வு அல்லது உள்ளறிவு:

     அதே  பாஸ்  வழுக்கி  விழுந்தா உங்களையும் அறியாம வாய் விட்டு சிரிப்பீங்களே , அது தான்  instinct  , அது தான் உங்க originality .



நாம எல்லாம் நம்ம instinct ட்ட மறைச்சுட்டு learned behavior ஐ வெளியே காட்டிகிட்டு திரியிறோம் .

     ஆனா மிருகங்கள் எல்லாம் அப்புடி இல்லை , முக்கா வாசிக்கும் மேல  ( around  95 %  )instinct  டை மட்டுமே நம்பி வாழ்வன.இதயத்துல என்ன தோணுதோ அத கேட்டு பட்டுன்னு செஞ்சிடும் ..

      ஒற்றுமை , சகோதர பாசம் , தாயன்பு எல்லாமே அதுக்கு instinct  தான் .ஆனா நாம learned  behavior ல தான் வண்டி ஓட்டிகிட்டு இருக்கோம் .
-------------------------------------------------------------------------------------------------------------
     சிறுத்தை தான் உலகிலேயே வேகமா ஓடக்கூடியது , (ஆனா பத்து நிமிஷம் வரை தான் வேகத்தை மெயின்டெயின் பண்ணும் ), 

     அது ஒரு இம்பாலா மானை குறி வச்சு துரத்த ஆரம்பிக்குது , சேசிங்கின் போது இம்பாலா டயர்டு ஆகி சிறுத்தை கிட்ட மாட்டும் சமயம் வரும் போது , அதை காணும் சகோதர இம்பாலா , இப்புடியே போனா நம்ம அண்ணனை போட்டுருவாங்கன்னு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க காரியத்தை செய்யும் .



     சிறுத்தையோட   பக்கமா ஓடி அதோட கவனத்தை தன் பக்கமா திருப்பும் ( அழுவாதீங்க ப்ளீஸ் ) , சிறுத்தையோட stamina அதுக்குள்ள கொறஞ்சிருக்கும் , அதுனால இம்பாலா முக்காவாசி தப்பிச்சிடும் .

அப்புடி என்ன இம்பாலா தனது உயிரை பணயம் வச்சு அண்ணன் காப்பாத்தனும் ?

இதுனால இம்பாலா வுக்கு என்ன நன்மை ?

ஒன்னும் பெருசா இல்லை பாஸ் , அண்ணன்  தனது ஜீனை பகிர்ந்தவன் , தனது ஜீனை உலகில் நிலை நிறுத்தவே இந்த கஷ்டம் எல்லாம் .

ஓடிப்போய் இதை ஒரு தடவை படிச்சிட்டு வாங்க பாப்போம் .
----------------------------------------------------------------------------------------------------------
survival லுக்காக உயிரினங்கள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக உதவிக்கொள்ளும் .

சரி , உதவியை வாங்கிகிட்டு , திரும்ப உதவி செய்யாமல் ஏமாற்றினால் ?

அப்படிப்பட்ட எமாற்றுகாரர்களும் உண்டு , 

அதுவும் ஒரு particular உயிரினத்தில் இது ரொம்பவும் காமன் (சரியா வாசி).

அந்த உயிரினம் Homo sapiens  என்று அழைக்கப்படும் சேவிங் செய்த குரங்குகள் .


the naked ape , தமிழில்  மனிதன் என்று அழைப்பார்கள் .

அவனுடைய குரங்கு புத்தி எங்கேயிருந்து வந்தது ?

ஏன் அவன் சேவிங் செஞ்ச குரங்கு மாதிரி இருக்கான் ?

No comments: