இப்படி இருந்த விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என சட்டசபையில் பார்க்க செம காமெடியாக இருந்தது....ஜெயலலிதாவுக்கு எதிராக சீறி பாய்ந்து விட்டார் விஜயகாந்த்.....பதிலுக்கு ஜெயலலிதாவும் விஜயகாந்தை விளாசி எடுத்துவிட்டார் வார்த்தைகளில்....விஜயகாந்துடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கபடுகிறாராம் ஜெயலலிதா...இப்போது வெட்கப்பட்டு என்ன பண்ண?கூட்டணி வைக்க வேண்டியது..ஜெயிக்க வேண்டியது....அப்புறம் என்னாலதான் நீ ஜெயித்த என மாறி மாறி கூப்பாடு போட வேண்டியது....இதை சொல்லத்தான் நீங்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்...
இவர்கள் அமைத்தது பொருந்தா கூட்டணி என்பதை இருவருமே வெட்ட வெளிச்சமாக்கிவிட்டனர்...
எதிர்கட்சியாக விஜயகாந்தின் செயல்பாடு சரி இல்லை என விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று சட்டசபையில் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்துவிட்டார் விஜயகாந்த்....
இனி ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி அல்லது எதிரிக்கட்சியாக விஜயகாந்த் செயல்படுவார் என நம்பலாம்....அடுத்த அடுத்த அதிரடிகளுக்கும் இனி பஞ்சம்... இருக்காது....இதில் ரொம்ப குஷியாக இருப்பவர் கருணாநிதிதான்....
ஆனால் சட்டசபையில் ஏதோ தனது படத்தில் பேசுவதுபோல அவர் பேசிய காட்சிகள்தான் உச்ச கட்ட காமெடி ....கொஞ்சம் விட்டால் கை நீட்டி பேசிய அந்த அமைச்சரை பாய்ந்து போய் தனது டிரேட்மார்க் உதையால் உதைந்திருப்பார் போலிருக்கிறது...பாருங்கள் அந்த பர பர காட்சிகளை....
நன்றி.....யு டியுப் மற்றும் சன் செய்திகள்....(வீடியோ உதவிக்காக )

No comments:
Post a Comment