தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ' 3 '. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் இருந்து ' WHY THIS KOLAVERI DI ' பாடல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அந்த பாடலை மட்டும் முதலில் வெளியிட்டார்கள். YOUTUBE , GOOGLE மற்றும் இந்தியா முழுவதும் இப்பாடல் மிகப் பிரபலமானது.
பல்வேறு பிரபலங்கள் இப்பாடலை கேட்டு விட்டு தங்களது டிவிட்டர் இணையத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
WHY THIS KOLAVERI DI பாடலை தொடர்ந்து ' WHY THIS KOLAVERI DA ' பாடலையும் சேர்க்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது படக்குழு.
இது குறித்து ' 3 'பட இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் " காதல் தோல்விக்கு ஆண்களை யாரும் ஏன் குறை சொல்வதே இல்லை என்று பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். பலரின் விருப்பத்திற்கு இணங்க நான் WHY THIS KOLAVERI DA பாடலை எழுதலாமா என யோசித்து வருகிறேன் " என்று கூறியுள்ளார்.
இளைஞர்களிடம் WHY THIS KOLAVERI DI பிரபலமானது போல், இளம் பெண்களிடம் WHY THIS KOLAVERI DA பாடல் பிரபலமாகிறதா என்று பார்ப்போம். !


No comments:
Post a Comment