| பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கின்ற இலங்கையின் கொலைக்களம் என்கிற வீடியோவை ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒளிபரப்பியமையை ஆட்சேபித்து இலங்கையர்களில் ஒரு சாரார் மெல்பேர்ன் சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் நேற்று ஈடுபட்டனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள், சனல் 4, ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியோருக்கு எதிராக சுலோக அட்டைகளை கைகளில் ஏந்திக் கொண்டு பலத்த எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். இலங்கை கிறிக்கெற் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் படத்துடன் கூடிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தமையை காண முடிந்தது. நாங்கள் தமிழரான முரளியை நேசிக்கின்றோம்..... ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமே கண்ணைத் திறந்து பார் என்கிற அர்த்தப்பட இச்சுலோக அட்டைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. ![]() ![]() ![]() |
Tuesday, 2 August 2011
போர்க் குற்ற வீடியோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முரளி!
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment