இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் ஆராய்ந்துவரும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த புதன்கிழமை ஒளிபரப்பிய இலங்கையின் யுத்த களத்தில் இருந்த வீரர்கள் எனக் கூறி இருவர் வெளியிட்ட கருத்துகள் மேலும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் அதிகாரி மற்றும் இராணுவ வீரரின் சாட்சியங்களை சனல் 4 பதிவுசெய்திருக்கிறது. சாட்சியங்களின் பாதுகாப்புக் கருதி அவர்களின் உண்மையான பெயர்கள் மறைக்கப்பட்டிருந்தன. சவீந்திர சில்வாவின் கீழ் அப்போது பணியாற்றிய இந்த அதிகாரியின் சாட்சியத்துக்கமைய கைதிகள் எல்லோரையும் கொல்லும்படியான உத்தரவு கோத்தபாயவினால் அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. சனல் 4 இனால் பெர்ணான்டோ என்று பெயரிடப்பட்ட இந்த படைவீரர் தான் கண்ட இறுதிநாட்களின் கொடூரத்தை விபரித்துள்ளார். பெருமளவான அப்பாவிச் சிறுவர்களை படுகொலை செய்தனர், கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார்கள், ஓலமிட்ட மக்களின் நாக்குகளை அறுத்தெறிந்தார்கள், வண்புனர்வுள்ளாகிய பின் பெண்களின் மார்பகங்களை அறுத்தெறிந்தார்கள். இவையெல்லாவற்ரையும் நான் எனது கண்களால் பார்த்தேன். நூற்றுக்கணக்கான சிறுவர்களின் உடல்கள் அந்தப் பிரதேசமெங்கும் சிதறிக்கிடப்பதையும் கண்டேன். யாராவது ஒரு தமிழ்ப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய வேண்டுமென்றால் அவளை அடித்துத் துன்புறுத்தி அவர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்கள். அவளது பெற்றொர்கள் அதைத் தடுக்க முற்பட்டபோது அவர்களை அடித்துக் கொன்றார்கள்.அது அவர்களின் இராச்சியமாக அவர்களுக்குத் தெரிந்தது. யுத்தகளத்திலிருந்த படைவீரர்களைப் பொறுத்தவரை அவர்களின் இதயங்கள் கல்லாக மாறியிருந்தன. இரத்தத்தையும், படுகொலைகளையும், மரணங்களையும் தொடர்ச்சியாகப் பார்க்கப் பழகிவிட்ட அவர்களுக்கு மனிதநேயம் என்பது துளியளவும் இருக்கவில்லை. அவர்கள் ஒரு கட்டத்தில் இரத்தக் காட்டேரிகளாகவே மாறியிருந்தனர். நிர்வாணமாக்கப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்ட பெருந்தொகையான பெண்களின் உடல்களைக் கண்டேன். அந்த உடல்களில் இன்னும் பல உறுப்புகளும் வெட்டி அகற்றப்பட்டிருந்தன. புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் அவர் தெரிவித்தார். எல்லா இடங்களிலும் சேர்த்து குறைந்தது 50 ஆயிரம் உடல்களைக் கண்டேன். தம்மால் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களின் உடல்களை உடனடியாக அகற்றவேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. எனவே அதற்காகவே பாரிய புல்டோசரைக் கொண்டுவந்து கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உடல்கள் மீது மண்ணை அணைபோலப் போட்டு மூடியதாகவும் அவர் குறிப்பிட்டார். மற்றைய சாட்சி சனல் தொலைக்காட்சியில் விபரிக்கையில், மே 15, 2009 இல் இறுதியான தாக்குதலை ஒருங்குசெய்யுமுன்னர் பிரிகேடியர் சவீந்திர சில்வா தனது படையினரை ஒன்றுதிரட்டி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை கூறியுள்ளார். “நேற்றிரவு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. இன்னுமொரு சிறிய நிலப்பரப்பு மட்டுமே எம்மால் கைப்பற்றப்பட வேண்டி இருப்பதாக என்னிடம் அவர் கூறினார். அதைக்கைப்பற்றுவதற்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யுங்கள். இறுதி முடிவு எப்படியாக அமைய வேண்டுமோ அவ்வாறே நீங்கள் செய்யுங்கள் என்று கோத்தபாய கூறியதாக சவேந்திர சில்வா அவர்களிடம் கூறியுள்ளார். புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைபொறுப்பாளர் நடேசன், புலித்தேவன், அவர்களது குடும்பங்கள், மற்றும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சரணடைந்த நிகழ்வு இதற்கு அடுத்தநாள் நடைபெற்றது. சரணடைந்த அனைவரையும் இராணுவம் கொன்று குவித்தது என்று அவர் அங்கு மேலும் வாக்குமூலமளித்துள்ளார். |
Tuesday, 2 August 2011
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment