Monday, 11 July 2011

இலங்கைக்கு உதவும் நாடுகளில் முதலிடத்தில் சீனா- அமெரிக்கா கவலை !




                                                                                                                            இலங்கையின்  அபிவிருத்திக்கு  பல நாடுகள்  உதவி  செய்கின்ற   போதிலும் சீனாவே முதலிடத்தில் இருப்பதாக 2011 ஏப்ரல் மாதம் வரைக்குமான அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இலங்கைக்கு உதவி செய்த நாடுகளில் சீனாவே முதலிடத்தில் இருந்தது. தற்போது நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு இவ்வருடம் எப்ரல் மாதம் வரைக்குமான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டு நிதிகளில் 55 வீதமான உதவி சீனாவிடமிருந்து கிடைத்துள்ளது. அடுத்து 30 வீதமான உதவித் தொகை ஜப்பானிடமிருந்து கிடைத்துள்ளது.

இவ்வாறு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமை அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் வெளிவிடப்பட்ட அமெரிக்க அறிக்கை ஒன்றில், சீனா இந்தியக் கடற்பரப்பில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகிறது என்றும், எனவே கடந்த 2005 இலிருந்து அது இலங்கைக்கான உதவியைப் பெருமளவில் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடொன்றில் குறிப்பாக இலங்கையில், சீனா தனது கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: