Wednesday, 7 September 2011

கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்


அயனாவரத்தை சேர்ந்தவர் அசோக் சக்கரவர்த்தி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கும், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஜுலை மாதம் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் அயனாவரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது வீட்டு அருகில் உறவினர்கள் சிலரும் வசிக்கிறார்கள்.

நேற்று முன்தினம் மாலையில் அசோக் சக்கரவர்த்தி, வேலை முடிந்து வீடு திரும்பினார். புதிதாக வாங்கிய செல்போன், இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து வந்த அசோக் சக்கரவர்த்தி மனைவி அகிலாண்டேஸ்வரியிடம் முதலில் காட்டாமல் உறவினர்களிடம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்கில் தொங்கினார்.

இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் அகிலாண்டேஸ்வரி உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அகிலாண்டேஸ்வரி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: