சீகிரிய � தம்புள்ளை பிரதேசத்தில் 'கிறீஸ் பூதமாக' நடித்து மக்களை அச்சமூட்டிக்கொண்டிருந்த மூகமுடியணிந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.![]() 34 வயதான இந்நபர் சீகிரியாவின் மரங்களடர்ந்த பகுதியில் மறைந்திருந்தபோது நேற்றிரவு 7.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராமவாசிகள் கொடுத்த தகவலொன்றின் மூலம் இந்நபர் மறைந்திருந்த இடத்தை பொலிஸார் கண்டறிந்தனர். மக்களை அச்சமூட்டுவதற்கு இந்நபர் பெண்களின் உள்ளாடைகளை திருடும் வழக்கத்தை கொண்டிருந்துள்ளார். கைது செய்யப்படும் போது ஒரு பை நிறைய பெண்களின் உள்ளாடைகளை அந்நபர் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவையைச் சேர்ந்த இந்நபர் கடந்த 3 வாரங்களாக சீகிரிய பகுதியில் இரவுநேரங்களில் திரிந்ததாக பொலிஸார் கூறினர். சீகிரிய பொலிஸ் நிலயை பொறுப்பதிகாரி வஜிர அத்தபத்து தலைமையிலான குழுவினரால் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். |
Monday, 15 August 2011
பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த கிறீஸ் பூதம் சீகிரியவில் கைது (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment