| மும்பையில் நேற்று முன்தினம் 3 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. |
| ஜவேரி பஜார், ஓபேரா ஹவுஸ், தாதர் கவுதர்கானா ஆகிய 3 இடங்களில் நடந்த இந்த சம்பவத்தில் 22 பேர் பலியாகினர். 133 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சதிச்செயலில் ஈடுபட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் தான் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் வாதிகள் மட்டுமின்றி, நடிகர், நடிகைகளும் கண்டித்துள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராய், தனக்கு செவாலியர் விருது வழங்க பிரான்ஸ் தூதரகம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார். குண்டு வெடிப்புக்கு அவர் கண்டனமும் தெரிவித்தார். இப்போது மேலும் சில நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். கோழைத்தனமான செயல் மூலம் மனிதர்களை கொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். மனித உயிர்கள் மீது கருணை காட்டுங்கள் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நடிகை சிரேயா விடுத்துள்ள கண்டனத்தில், குண்டு வெடிப்பு சம்பவத்தை கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பும் நிலை ஏற்படும் என்று நம்புகிறேன். குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஜெனிலியா, சினேகா உல்லால் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த அக்கிரமம் எப்போது முடிவுக்கு வரும்? என்று கமலஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் விரக்தியுடன் கேள்வி எழுப்பினார். மும்பையின் ஒரு பகுதியில் நடந்த சினிமா சூட்டிங்கில் கலந்து கொண்டு விட்டு தாதரை கடந்து வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில், குண்டு வெடிப்பு சம்பவம் எனது காதுக்கு வந்தது. நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். கோழைத்தனமாக மனித விரோத செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஹன்சிகா ஆவேசப்பட்டார். குண்டு வெடிப்பை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று ஜெனிலியா தெரிவித்துள்ளார். மும்பை மக்கள் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு தயாராக வேண்டும் என்று சினேகா உல்லால் அழைப்பு விடுத்துள்ளார். |
Saturday, 16 July 2011
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம்: நடிகர், நடிகைகள் கடும் கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment