Saturday, 16 July 2011

கடன் பிரச்சனையால் ஜனாதிபதி பதவிக்கு ஆபத்து: ஒபாமா கவலை


அமெரிக்காவின் கடன் உச்
சவரம்பை மீறி விட்டது. அமெரிக்கா முழுவதும் கடன் நெருக்கடி தலைதூக்கி உள்ளது. இதனால் தனது ஜனாதிபதி பதவிக்கு ஆபத்து வரும் என ஒபாமாவுக்கு கவலை ஏற்பட்டு உள்ளது.அமெரிக்காவில் வாங்குவதற்கான கடன் உச்சவரம்பு 14.3 டிரில்லியன் டொலர் ஆகும். ஒரு டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி அளவை குறிக்கும். இந்த கடன் உச்சவரம்பு நிலையை உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா எட்டி விட்டது.
அந்த நாடு தனது கடன் உச்சவரம்பை அதிகரிக்கா விட்டால் அதன் கடன் தொகைகளுக்கு திரும்ப செலுத்த முடியாத பிரச்சனை ஏற்படும். இந்த கடன் உச்சவரம்பை ஆகஸ்ட் 2ம் திகதி அமெரிக்கா உயர்த்த வேண்டி உள்ளது.
குடியரசு கட்சியினருடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்ட போது ஒபாமா கூறுகையில்,"தற்போதைய கடன் பிரச்சனையால் எனது பதவி பறிபோகும் நிலையும் உள்ளது" என தெரிவித்தார்.
அமெரிக்காவின் கடன் பிரச்சனையை சமாளிக்க ஒபாமாவின் டெமாக்ரேட்ஸ் கட்சியினர் குடியரசுக் கட்சியினருடன் கருத்து வேறுபாடுடன் மோதி வருகிறார்கள்.
டெமாக்ரேட்ஸ் கட்சியினர் சில செலவின ரத்து வசதி உள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு குடியரசு கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

No comments: