| திரிபோலி கைப்பற்றப்பட்டால் அதனை அழிக்க கடாபி திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அந்நாடு மறுத்துள்ளது.லிபியாவில் கடாபி ஆதரவு படையினருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லிபியாவுக்கான ரஷ்ய தூதர் அந்நாடு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: கிளர்ச்சியாளர்கள் லிபிய தலைநகர் திரிபோலியை கைப்பற்றினால் அந்த நகரை அழிக்கும் திட்டமுள்ளதாக லிபிய பிரதமர் அல் பக்டாடி அல் மக்மூடி தன்னிடம் கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு லிபியா மறுத்துள்ளது. இது குறித்து லிபிய அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"திரிபோலியை அழிக்கும் திட்டமுள்ளதாக கூறுவது தவறானது. இது போன்ற கருத்துக்களை வெளியிடவில்லை என ரஷ்ய தூதர் அலுவலகம் எங்களிடம் கூறியுள்ளது. இது தவறான தகவல். திரிபோலி நகரை அழிக்க மாட்டோம்" என்றார். |
Saturday, 16 July 2011
திரிபோலியை அழிக்கப் போவதாக வெளியான தகவல் பொய்யானது: லிபியா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment