Saturday, 5 November 2011

பலருடன் தொடர்பு வைத்திருந்தால் மனைவி கொலை!

பலருடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பொட்டலமாக கட்டி கிணற்றில் வீசினேன் என்று கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம், பெரிய காலனி கிழக்கு தெருவில் பொதுக்கிணறு உள்ளது. இதில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது.
புகாரின்படி பரங்கிமலை துணை கமிஷனர் அஸ்வின் கோட்னீஸ், உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் அனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கிணற்றில் மிதந்த 4 பிளாஸ்டிக் பொட்டலங்களை எடுத்து அவிழ்த்தனர். அதில், இளம் பெண்ணின் 2 கால்கள், 2 கைகள், மார்பு, இடுப்பு பகுதி தனித்தனியாக அழுகிய நிலையில் இருந்தது. தலை இல்லை.

விசாரணையில், அதேபகுதி பஜனை கோயில் தெருவை சேர்ந்த சேதுராமன் என்பவர் அந்த கிணற்றில் கடந்த 2 நாட்கள் முன்பு பிளீச்சிங் பவுடர், பினாயில் தெளித்ததும், அதன்பிறகு அவர் தலைமறைவானதும் தெரிய வந்தது.
இதையடுத்து அசோக் நகரில் பதுங்கியிருந்த சேதுராமனை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மனைவியை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.
போலீசில் சேதுராமன் அளித்துள்ள வாக்குமூலம்:
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொழில் செய்து வந்த ஜெயாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அவளை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன.
எனினும் பலருடன் அவள் கள்ள தொடர்பு வைத்திருந்தாள். பல முறை கண்டித்தும் திருந்தவில்லை. கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வியாபார விஷயமாக வெளியே சென்றேன்.
மதியம் திரும்பியபோது வீட்டில் இருந்து ஒரு வாலிபர் வெளியே ஓடினார். உள்ளே சென்றபோது ஆடையின்றி ஜெயா அலங்கோலமாக படுத்திருந்தாள்.
ஆத்திரமடைந்த நான், உலக்கையால் ஜெயாவின் தலையில் அடித்தேன். அதில் அவள் இறந்து விட்டாள். பின்னர் உடலை வெட்டி பிளாஸ்டிக் பொட்டலத்தில் கட்டினேன்.
மாலையில் வீடு திரும்பிய குழந்தைகளிடம், அம்மா ஊருக்கு சென்றுவிட்டாள். அவளை தேடவேண்டாம் என்றேன். அதன்பிறகு நள்ளிரவு பொட்டலத்தை எடுத்துக்கொண்டு கிணற்றில் வீசினேன். துர்நாற்றம் விசியதால் பிளீச்சிக் பவுடர் வாங்கி தூவினேன்.
இவ்வாறு சேதுராமன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலையை கிணற்றில் வீசியதாக அவர் தெரிவித்ததை தொடர்ந்து கிணற்றில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

No comments: