| எனக்கும் பிரபுதேவாவுக்கும் சண்டை ஏதுமில்லை இருவரும் சந்தோஷமாகதான் இருக்கிறோம் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். நயன்தாரா மீது கொண்ட காதலால் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விரைவில் இருவருக்கும் திருமணம் என்று கூறப்படடது. ![]() தற்போது இருவருக்கும் சண்டை எனவும், திருமணம் நின்றுவிட்டதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணிப் பத்திரிகைகளும் இதுகுறித்து விசாரித்து இருவரின் சண்டை உண்மைதான் என்று செய்திகள் வெளியிட்டன. தற்போது இச்செய்திக்கு விளக்கம் அளித்துள்ள நடிகை நயன்தாரா எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக ஒற்றுமையாக உள்ளோம். இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம் என்பது உண்மை. திருமணத் திகதியை விரைவில் அறிவிப்போம் என்றார். எங்களின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றது என்றும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் எனவும் நயன்தாரா விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. |
Tuesday, 18 October 2011
பிரபுதேவா உடன் சண்டை ஏதும் இல்லை: நயன்தாரா(படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment