தைவான் தலைநகர் தைபேயில் உள்ளது தேசிய தைவான் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இங்குள்ள எலக்ட்ரானிக் மற்றும் கணணி பிரிவு பேராசிரியர் சியூ லின் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து பாடும் ரோபோ அழகியை உருவாக்கி உள்ளனர். ![]() பாட்டு ஸ்வரங்கள்(நோட்ஸ்) எழுதிய பேப்பரை இதன் முன்பு காட்டினால் போதும். பாடகி போல சூப்பராக பாட ஆரம்பிக்கிறது. பேப்பரில் எழுதியிருக்கும் நோட்ஸ்களை படிப்பதற்காக இதன் கண்ணில் பிரத்யேக கமெரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் வரிகளை முதலில் கவனமாக படிக்கிறது. பின்னர் ஒலிக்கான நோட்ஸ்கள் தனியாக சின்தசைசர் கருவிக்கு மாற்றுகிறது. பாடல் வரிகளை சரியாக உச்சரித்து ராகம் போட்டு பாடுகிறது. சீனாவின் மேண்டரின் மொழியில் எழுதப்பட்ட எந்த பாடலையும் 40 வினாடியில் படித்துவிட்டு இந்த அற்புத ரோபோ பாடிவிடுமாம். |
Tuesday, 23 August 2011
பாட்டு பாடும் அதிசய ரோபோ(வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment