![]() ![]() |
| திருகோணமலையில் வைத்து கழுத்தறுத்து ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் 02.08.2010 அன்று இச் சம்பவம் நடந்ததாக பொலிசில் பதிவாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து சென்ற கந்தையா சிவபாலன் என்பவரை அவரது உறவினர்கள் சிலர் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதில் பெண் இக் கொலை முயற்சிக்கு மூலகாரணமாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இப் பெண் தனது உறவினர்கள் சிலரை வைத்து சிவபாலனைக் கொலைசெய்ய முற்பட்டுள்ளார். அவர் அனுப்பிய ஆட்கள் தலைக் கவசம்(ஹெல்மெட்) அணிந்து சிவபாலன் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளனர். அதிஷ்டவசமாக இவர் உயிர்தப்பினார். சந்தேக நபர் இலங்கையில் இருந்து தப்பி சுவிஸ் வந்து விட்டதாகத் தெரிவித்துள்ள பொலிசார் அவரைக் கைதுசெய்து தரும்படி இன்ரர் போல் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.( அதன் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளது) கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தவரை பொலிசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளைப் பொலிசார் எடுத்துள்ளனர். குடும்பச் சண்டை காரணமாகவே பெண் சிவபாலனை தீர்த்துக்கட்ட எண்ணியதாக அவர் தெரிவித்தார். தான் இலங்கை சென்றவேளை அங்கே இருக்கும் உறவினர்கள் மற்றும் மேலும் ஒரு ஆயுததாரியையும் காசுக்கு அமர்த்தி இக் கொலைமுயற்சியை அவர் மேற்கொண்டார் என சிவபாலன் தெரிவித்தார். 08.08.2011 அன்று வெளியான முன்னைய செய்தி : சுதந்திரம் அடைந்த இலங்கையில் சமாதானமே நிலவி வருவதாக நினைத்து புலத்தில் இருக்கும் தமிழர்கள் இலங்கைக்கு விடுமுறையில் சென்று வருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகின்றது.திருகோணமலையில் சமாதானமும் சகச நிலையும் வந்துவிட்டது என்று நினைத்து சுவிஸில் வசித்து வந்த கந்தையா சிவபாலன் குடும்பத்தினர் திருகோணமலைக்கு சென்றனர். ஆனால் அங்கே அவரை குறிவைத்து யுத்தம் நடந்த காலத்தில் நடப்பதைப் போல் தலைக்கவசம்(ஹெல்மெட்) அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு 8909 என்னும் இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிளில் வந்தோரால் 02.08.2010 மாலை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள். அவர் தெய்வாதீனமாக கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். இது விடயமாக காவற்துறையில் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்தோடு திருகோணமலை மாவட்டத்தில் நடக்கும் இப்படியான பயங்கர சம்பவங்களுக்கு சிவிலுடையில் வருகின்ற கடற்படைக்கும் யுத்தகாலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்த கும்பலுக்கும் தொடர்புள்ளதாக அறியப்படுகின்றது. இவ் விடயங்களை மேலிடம் அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு சமாதானத்தை நிலைநாட்ட பாடுபடும் பாதுகாப்பு செயலாளர் கவனத்திற்கு எடுத்து திருகோணமலையில் மூவின மக்களும் நிம்மதியாகவும் சமாதானமாகவும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கும்பலால் மக்கள் தினமும் பீதியுடனேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர். |
Friday, 19 August 2011
கழுத்தறுத்து கொலை செய்ய தமிழ் பெண் திட்டம்: INTERPOL பிடியாணை ?
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment