ரூபாவாஹினி தொலைக்காட்சியில் தலைவர் உடல் காட்டப்படுவதுபோலவும், அதனைத் தலைவரே பார்த்துக்கொண்டு இருப்பதுபோலவும் கிராபிக்ஸில் படம் ஒன்றைச் செய்து அதனை முதல் பக்கத்தில் பிரசுரித்து தமிழ் நாட்டில் லட்சக்கணக்கான பிரதிகளை விற்றுத் தீர்த்தது நக்கீரன். அப்போது தேசியத்தையும் ஈழத் தமிழர் போராட்டத்தையும் விற்கவேண்டாம் என்று அதிர்வு இணைய எழுதியது. ஆனால் அவர்களிடம் இருந்து கிடைத்தது என்னமோ மிரட்டல் தான் ! தற்போது இதே பாணியில் ஐ.நா வின் 3வர் அடங்கிய குழு வெளியிட்ட அறிக்கையை வைத்து புதிதாக ஒரு வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது மனிதம் என்னும் அமைப்பு. இதன் தலைவர் அக்கினி சுப்பிரமனியம் என்பவர் ஆவார். "அக்கினிக்கும் வணங்கா மண் கப்பலுக்கும்"... "அக்கினிக்கும் சமீபத்தில் கனடா செல்லவிருந்த புத்தங்கள் இலங்கையில் மாட்டிக் கொண்டதற்கும்" ... "அக்கினிக்கும் காஸ்பர் அடிகளாருக்கும்"... "அக்கினிக்கும் ரி.ஆர்.ஓ ரெஜிக்கும்" என்ன சம்பந்தம் என்று எல்லாம் எங்களைக் கேட்கவேண்டாம். வணங்கா மண் கப்பல் சென்றபோது இவர் என்ன செய்தார் என்பது தொடக்கம், சமீபத்தில் இவரூடாக கனடாவுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் இலங்கை துறைமுகத்தில் பறிமுதலான கதைவரை எல்லாமே இணையத்தில் வெளியாகியது யாவரும் அறிந்ததே. இதனை நாம் திருப்பிக் கூறத் தேவையில்லை. சரி விடையத்துக்கு வருவோம் ! ஐ.நா வின் 3வர் அடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழில் வெளிவிடுவதாக தமிழ் நாட்டில் இயங்கும் மனிதம் என்னும் அமைப்பு கூறியுள்ளது. "ஆஹா " இது அருமையான விடையம் அல்லவா என்று நினைத்து எமது பார்வையை அதன்பால் திருப்பினால் அங்கே உள்ள வண்டவாளங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றது. ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையை தாம் வெளிவிடுகிறோம் என்று இவர்கள் கூறுகிறார்கள் அப்படி என்றால் அதனை முதல் பதிப்பாக வெளியிடவேண்டியது தானே ? அப்படிச் செய்யாமல் முதலில் ஒரு புத்தகம் வருமாம் அதில் சிலரது கருத்துகளும் கட்டுரைகளும் இருக்குமாம்... பின்னர் அடுத்த( 2ம் வெளியீட்டில்) தான் ஐ.நா அறிக்கை வருமாம். ஐ.நா அறிக்கை என்ன தொடர்கதையா 2ம் பாகம் எழுத ? இல்லை சின்னத்திரை நாடகமா விறுவிறுப்பான காட்சி ஒன்றோடு முடித்து, நாளை தொடரும் என்று முடிக்க ?
அதிலும் முதல் பாகத்தில் கட்டுரை எழுதியுள்ளோர் விபரங்களைக் கேட்டால் கொஞ்சம் ஷாக் அடிக்கும். அதற்காக எழுதாமல் இருக்கமுடியுமா ? அது யார் யார் என்று பார்ப்போமா...
நாடு கடந்த அரசின் பிரதமர் ருத்திரகுமார் அவர்கள் இப் புத்தகத்தில் எதோ எழுதி இருக்கிறாராம் என்றும் பின்னர் GTF தலைவர் வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் இதில் எழுதியுள்ளதாகவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு மத்தியில் புலிகளையும் போராட்டத்தையும் படுமோசமாக கொச்சைப்படுத்தி எழுதும் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களின் கட்டுரையும் இப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது ருத்திர குமார் மற்றும் இமானுவேல் அடிகளார் வரிசையில். இவர்களோடு சரிசமமாக டி.பி.எஸ் ஜெயராஜ் வைக்கப்படுகிறார் என்றால் இது என்ன சூழ்ச்சியா ? தெரிந்து தான் இவை அனைத்தும் நடக்கிறதா இல்லை தெரியாமல் நடக்கிறதா ? சிங்களம் போடும் எலும்புத்துண்டுக்காக அலையும் இந்த டி.பி.ஸ் ஜெயராஜ் போன்றோரை ஐ.நா அறிக்கையின் தமிழாக்க புத்தகத்தில் கட்டுரை எழுதச்சொன்னதை ஐ.நா அறிந்தால்.... நிபுணர் குழுவே கைகொட்டிச் சிரிக்குமே. இது ஒரு கேலிக்கை கூத்து என்று வேற்றின மக்களே கூறுவார்களே , இவர்களுக்குத் தெரியவில்லையா என்ன ? டி.பி.எஸ் ஜெயராஜ் கே.பியின் கூட்டாளி என்பது உலகறிந்த உண்மை, அப்படி இருக்கும்போது இவர் கட்டுரைடை புத்தகத்தில் இணைத்தது யார் ? அப்படி என்றால் தொடர்புகள் எங்கே எங்கே விரிந்துசெல்கிறது ?
சரி அதுவும் போகட்டும், அக்கினி சுப்பிரமணியனோடு அதிர்வு இணையம் இப் புத்தகம் தொடர்பாகக் கேட்டபோது, இப் புத்தகத்தை 225/= ரூபாய்க்கு விக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். 50 ஆயிரம் பிரதிகள் விற்றால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும். போதாக்குறைக்கு 2ம் பாகம் வேறு. ஐ.நா அறிக்கை தமிழில் இருக்கிறது என்று நம்பி மக்கள் முதலாம் பாகத்தை வாங்க அதில் இல்லை 2ம் பாகத்தில் தான் அறிக்கை இருக்கிறது என்று பின்னர் தானே தெரியவரும். இதற்காக அவர்கள் 2ம் பாகத்தையும் வாங்கவேண்டி இருக்கும். ஆக மொத்தம் 450/= ரூபாவுக்கு 2 பாகங்களும் விற்பனையாக உள்ளது. என்ன ஒரு பிசினஸ் மயின்ட் பார்த்தீர்களா ? இதில் இருந்து கிடைக்கவிருக்கும் பணத்தை எதற்காகச் செலவுசெய்யப் போகிறோம் என்று மனிதம் என்னும் அமைப்பு இதுவரை வாய் திறக்கவில்லை. மொத்தத்தில் தமிழீழப் போராட்டத்தையும், இறந்த மாவீரர்களையும் வைத்து கேவலமான பிழைப்புகளை நடத்திவருகின்றனர் ஒரு சிலர். தற்போது போதாக்குறைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தையும் விலைபேசி விற்று, ஐ.நா அறிக்கையையும் வித்துக் காசாக்க ஒரு கூட்டம் ரூட்டுப்போடுகிறது.
தமிழர்களின் போராட்டங்கள் எல்லம் "பாகம் 1" "பாகம் 2" என்று வர இருக்கு ! இதனைத் தமிழினம் தொடர்ந்தும் அனுமதிக்குமா ? இல்லை இவர்களைப் போன்றோரை களையெடுக்குமா ? உங்கள் கைகளில் விட்டுவிடுகின்றோம் !

No comments:
Post a Comment