Wednesday, 27 July 2011

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இன்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும், கச்சதீவை மீட்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு நேரில் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதாவை அவர் சந்திப்பது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை பிரச்சனையில் தமிழக அரசுக்கு துணையாக இருப்போம்: ஜெயலலிதாவை சந்தித்தப் பின் சீமான் பேட்டி
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கச்சதீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்ததாகவும், இலங்கை பிரச்சனையில் தமிழக அரசுக்கு துணையாக இருப்போம் என்று முதல்வரிடம் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments: