13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!
13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!
மைக்கேல் பெர்னாண்டஸ் மற்றும் செரில் ஹோல்டன் என்ற தம்பதிகள் இருவரும் பள்ளிப் பருவத்தில் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர். இதில் விசேட அம்சம் என்னவெனில் மைக்கலுக்கு வயது 13, செரிலுக்கு வயது 15 ஆகும். இவர்கள் இருவரும் 13 மற்றும் 15 வயதில் திருமண வாழ்க்யைத் ஆரம்பித்துள்ளனர்.
நாம் இருவரும் இணைந்து வாழ முடியும் என்பதை அனைவருக்கும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். தற்போது 22 வயதாகும் மைக்கலுக்கு 9 வயதில் மகனுண்டு. இந்தப் பையன் மட்டுமல்ல இவர்களுக்கு குழந்தை.
மேலும் இரண்டு பையன்கள் உள்ளார்கள். மைக்கல் தெரிவிக்கையில், “ எனக்கு 13 வயதாக இருக்கும்போது அயல்வீட்டில் இருந்த செரில் 15 வயதில் கர்ப்பமைடைந்தார்” என்கிறார். முதல் குழந்தை லியாம் பிறந்த பின் பெற்றோர்களான இவர்களுக்கு 14 மற்றும் அவரது மனைவிக்கு 16 வயதாகும்.
தற்போது இவர்களுக்கு மேலும் இரண்டு பையன்கள். பிரியானுக்கு 3 வயது, ஆர்சிக்கு 11 மாதங்கள் ஆகும்.
ஆனாலும் இந்த இளம் வயது தந்தை தனது கல்வியை தொடர்ந்து கொண்டே குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தொழில்களையும் செய்கிறார்.

கடன்பட்டு வாழ்வதைவிட தனது சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றுவதில் பெருமையடைகிறார்.
இளம் தம்பதிகள் வாடகைக்கு வீடு எடுத்து தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். “பெருமளவான இளசுகள் தமது இளம் வயதில் பெற்றோர்களாக விரும்புவதில்லை.
ஆனால் நான் ஒரு அதிஷ்டசாலி. மைக்கல் ஒரு போதும் குடிப்பதற்காக தெருவில் சுற்றித்திரிவதில்லை. அவர் ஒரு நல்ல தந்தையாகவே இருக்க விரும்புகிறார் என்று செரில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment