கடும் பட்டினி காரணமாக வடபகுதி சிறுவர்கள் உயிராபத்தையும் கவனத்தில் கொள்ளாது இருப்புத் துண்டுகளைச் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் சிறுவர்கள் கண்ணிவெடி உள்ளிட்ட வெடிபொருட்களின் இரும்புத் துண்டுகளையும் மேலும் சிதறிக்காணப்படும் ஆபத்தான இரும்புத் துண்டுகளையும் சேகரித்து வருகின்றனர். இராணுவத்தினால் பாதுகாப்பற்ற பிரதேசம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் சென்று இவர்கள் இரும்புத் துண்டுகளைச் சேகரித்து வருகின்றனர். யுத்தம் காரணமாக பெற்றோரை இழந்த மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் என அறியப்படுகிறது. இதேவேளை, இந்த மாவட்டங்களில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சில சிறுவர்கள் கூலித்தொழில் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன்காரணமாக சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. குறைந்தது அதற்கான எந்தவொரு வேலைத் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. இவற்றுக்குப் பதிலாக அரசாங்கம் ஊடகக் கண்காட்சிகளையே நடத்தி வருகிறது என்று விசனம் தெரிவித்துள்ளனர் வடபகுதி மக்கள். |
Saturday, 13 August 2011
கண்ணிவெடிகளில் உள்ள இருப்புத் துண்டுகளை விற்கும் சிறுவர்கள் !
Subscribe to:
Post Comments (Atom)

கடும் பட்டினி காரணமாக வடபகுதி சிறுவர்கள் உயிராபத்தையும் கவனத்தில் கொள்ளாது இருப்புத் துண்டுகளைச் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment