உலக சாதனை படைப்பதற்காக சிங்கத்துடன் 35 நாள் தங்கும் திட்டத்தோடு, அதன் குகைக்குள் நுழைந்திருக்கிறார் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர். உக்ரைனின் வாசிலிகாநகரை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (40).அங்கு மிருக காட்சி சாலை நடத்தி வருகிறார். இவரது மிருககாட்சி சாலையில் கத்யா என்ற பெண் சிங்கம், சாம்சன் என்ற ஆண் சிங்கம், கரடிகள் மற்றும் பூனைகள் உள்ளன. ![]() ![]() தனது மிருக காட்சி சாலைக்கு நிதி திரட்டுவதற்காகவும் உலக சாதனை படைப்பதற்காகவும், பெண் சிங்கத்துடன் 35 நாட்கள் தங்கும் முடிவோடு நேற்று முன்தினம் முதல் அதன் குகைக்குள் சென்றுள்ளார். குகையில் வெப் கேமரா, டாய்லட் மற்றும் குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அலெக்ஸாண்டர் கூறுகையில், கத்யா தற்போது கர்ப்பமாக உள்ளது. ![]() ![]() இந்த மாத மத்தியில் அது குட்டி போடும். அதற்கு நான் உதவுவேன். கொடிய மிருகமாக இருந்தாலும் இதுபோன்ற நேரத்தில் அரவணைப்பை விரும்பும். நான் ஒரு ஓவியன் குகையில் எப்போதும் ஓவியம் வரைந்து கொண்டிருப்பேன். விலங்குகளுக்கு சிகரெட், பீர் வாசனை எரிச்சலூட்டும். எனவே அவற்றை முற்றிலும் தவிர்க்கிறேன் என்றார். அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஜேம்ஸ் ஜாப்லான் என்பவர் சிங்கத்தோடு 2 வாரங்கள் கழித்ததே இதுவரை உலக சாதனையாக இருக்கிறது. இதை முறியடிக்கும் நோக்கத்தோடு குகைக்குள் புகுந்திருக்கிறார் அலெக்ஸாண்டர். |
Saturday, 13 August 2011
உலக சாதனைக்காக சிங்கத்துடன் வாழும் மனிதர்(படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment