Wednesday, 13 July 2011

மாறியது கூட்டணி மாற்றியது விக்ரம்!


 

யார் யாருடன் கூட்டு வைக்கிறார்கள்? எந்த கூட்டணி திடீரென்று முறியும்? இந்த கேள்விகளை அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் கேட்கலாம். ஏனென்றால் இங்கும் கூட்டணி மாற்றம் சர்வ சகஜம்.

கடந்த சில வாரங்களாக அஜீத் வீட்டில் தென்பட்ட மதராசப்பட்டினம் விஜய், மீண்டும் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம். இதற்காக கைநீட்டி அட்வான்சும் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பது அநேகமாக யூடிவி நிறுவனமாக இருக்கலாம். வருடத்திற்கொரு படத்தில் நடித்தால் கூட நல்ல விஷயம் என்று நினைக்கிற அளவுக்கு விக்ரம் நடிக்கும் படங்களின் தயாரிப்பு காலம் கூடிக் கொண்டே போகிறது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து இழந்ததை சரிகட்டும் முடிவுக்கு வந்திருக்கிறார் அவர்.

இந்த நிலையில்தான் விக்ரமை பினாமியாக வைத்து படம் தயாரிக்க நினைத்த ஒரு பெண்மணி, ஈசன் படத்தை துவங்கினார். இதில் ஏற்பட்ட கசமுசாவால் விக்ரம் ஒருபுறம், பெண்மணி ஒருபுறம், சசிக்குமார் ஒருபுறம் பிரிந்தார்கள். ஈசன் போகட்டும். நான் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க நீங்கள் கால்ஷீட் கொடுங்கள். அதுபோதும் என்றாராம் அவர். அதற்கும் சம்மதித்தார் விக்ரம். இருவரும் கூடிப்பேசி குறிப்பிட்ட தேதியையும் குறித்தார்கள். ஆனால்...

பெண்மணிக்கு கொடுத்த அதே தேதிகளைதான் இப்போது யூடிவிக்கு கொடுத்திருக்கிறாராம் விக்ரம். சினிமாவுக்குள்ளேயே சினிமா ஓட்றாங்களே...

No comments: