Saturday, 4 February 2012

வெங்கட் பிரபு இயக்கும் சூர்யா புதிய படம்


பல வெற்றி படங்களை தயாரித்த முக்தா சீனிவாசனும், அவரது சகோதரர் வி.ராமசாமியின் மகன் முக்தா கோவிந்தும் இணைந்து முக்தா எண்டர்டைன்மெண் (பி) லிட், என்ற பட நிறுவனத்தை துவங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனம் இனிமேல் வருடத்திற்கு மூன்று பிரமாண்டமான படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக வெற்றிப்பட இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் படத்தை தயாரிக்கிறார்கள். இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில்  நடிகர் சூர்யா நடிக்கிறார். அதோடு இந்நிறுவனத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு புதிய இயக்குனரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் எவ்வளவோ சாதிக்க வேண்டும் என்று புது சிந்தனையுடன் செயல்படுகிறார்கள். அவர்களுடன் இணைவது பெருமையான விஷயம் என்கிறார் தயாரிப்பாளர் முக்தா வி.சீனிவாசன்.

No comments: