Thursday, 12 January 2012

"நான் 'பந்தா' இயக்குனர் அல்ல" -பாண்டிராஜ்


பசங்க ஹிட் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ். வம்சம் படத்தையும் டைரக்டு செய்தவர். தற்போது மெரீனா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் பாடல் சி.டி. மெரினா கடற்கரையில் வெளியிடப்பட்டது. பின்னர் பாண்டிராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பசங்க புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படக் கம்பெனி தொடங்கி மெரினா படத்தை நானே தயாரிக்கிறேன். வெறும் ஒரு லட்சம் ரூபாயை வைத்துக் கொண்டு தயாரிப்பில் இறங்கி விட்டேன். திரை மறைவில் நிறைய பேர் உதவுகிறார்கள்.

மெரினா படத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடிக்கின்றனர். மெரினா கடற்கரையில் திரியும் சிறுவர்கள் பற்றிய கதை. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி முக்கியம் என்பதை படத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

பட்டினப்பாக்கத்தில் இருந்து காசிமேடு வரை கடற்கரை பகுதியில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். வணக்கம் வாழ வைக்கும் சென்னைஎன்ற பாடலை வித்தியாசமாக எடுத்துள்ளோம். விக்ரம் பாடி கொடுத்தார். விமலை ரோட்டில் ஆட வைத்து எடுத்தோம். சசிகுமார், சினேகா போன்றோரும் ஆடி உள்ளனர்.

என்னை பந்தா இயக்குனர் என்று விமர்சிக்கிறார்கள். மூன்று படங்கள் எடுத்தும் பைக்கில்தான் வருகிறேன். நான் பந்தா செய்வது இல்லை. இன்னும் பத்து படங்கள் இயக்கினாலும் பசங்கபடத்தில் இருந்த மாதிரியே இருப்பேன். எவ்வளவு புகழ் வந்தாலும் எனக்கு பந்தா வராது.

வெயிலில் தொப்பிகூட போடாமல் தான் படப்பிடிப்பை நடத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நடிகை ஓவியா, நடிகர் ஜெயப்பிரகாஷ் உடன் இருந்தனர்.

No comments: