Saturday, 20 August 2011

பார்க்காமலேயே மலர்ந்த காதல்: விபத்தில் காதலன் இறந்ததால் உயிரை மாய்த்த காதலி


கோவையை அடுத்த கவுண்டம்பாளையத்தை சேந்தவர் சண்முகம். இவரது மகள் காயத்ரி(வயது25). கோவையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திருப்பூரை சேர்ந்தவர் விஜய். கடந்த ஒரு வருடமாக இருவரும் செல்போனிலேயே பேசி காதலை வளர்த்து வந்தனர். தினமும் போனில் பேசிக் கொள்வார்கள்.

அப்போது விஜய் தனது வீட்டு முகவரியை காயத்ரியிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக விஜய் தனது ஆசை காதலியிடம் பேசவில்லை. அவருடைய செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த காயத்ரி தனது காதலன் கூறிய முகவரியில் சென்று தேடினார்.

அப்போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. விஜய் விபத்ததில் இறந்து விட்டார் என்பது தான் அந்த தகவல். மனவேதனையில் ஊர் திரும்பிய காயத்ரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: