Sunday, 28 August 2011

பேரறிவாளனின் தாயார் லங்காஸ்ரீ வானொலி மூலம் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் விடுக்கும் அன்பான வேண்டுகோள் (ஓடியோ இணைப்பு)


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்ப்பட்ட பேரறிவாளனின் தாயார் அறுபுதம்மாள் தனது மகனுக்கும் ஏனைய இருவருக்கும் கருணை காட்டி இத்தூக்குத்தண்டனையில் இருந்து அவர்களைக் காப்பாற்றி தரும்படி உலக மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.


லங்காஸ்ரீ வானொலி மூலம் உலகத் தமிழ் மக்களுக்கு மேற்கண்டவாறு உருக்கமான வேண்டுக்கோள் ஒன்றை அன்பாகவும், நம்பிக்கையுடனும் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 20 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு இந்தாண்டிலாவது விடுதலை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்திருப்பதோடு, எதிர்வரும் 9ம் திகதி தூக்குத்தண்டனைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்றதோடு அதிர்ச்சியாகிவிட்டோம்.

இவர்கள் மூவரையும் தற்போது தனித்தனி பூட்டிய அறைகளில் விடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இத்தூக்குத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தவாவது, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என உலகத் தமிழ் மக்கள் அனைவரிடமும் பேரறிவாளனின் தாயார் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இவர்களின் குற்றத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும், இவர்களுக்கான தண்டனையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இம்மூவரது உயிர்களையும் காக்குமாறு உலகத்து உறவுகளிடம் இத்தாயாரின் விடுத்த உருக்கமான வேண்டுகோளை செவிமெடுக்க...

No comments: